மனைவி பிரேமலதாவிற்கு கேப்டன் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்… இன்றும் பொக்கிஷமாக பாதுகாக்கும் பிரேமலதா!

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சிறுவயதிலேயே தாயை இழந்தவர். அவர் தனது மனைவி பிரேமலதாவைக் கரம்பிடித்தபின் தாய்க்குத் தாயாகவும், நல்ல மனைவியாகவும் விளங்கினார். விஜயகாந்தின் இறப்பு வரை கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வந்தது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். தேமுதிக கட்சி ஆரம்பித்த பின்னர் அனைத்து நிகழ்வுகளிலும் இருவரும் இணைந்து தொண்டர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது, நலத்திட்ட உதவிகள் செய்வது போன்ற பணிகளை முன்பை விட அதிகமாகச் செய்து வந்தனர்.

ஆனால் தனக்கென்று பிரேமலதா கேப்டனிடம் எதுவுமே கேட்டது கிடையாதாம். பேட்டி ஒன்றில் பிரேமலதா கூறும் போது, “கேப்டன் விஜயகாந்த் அவர்களை நான் திருமணம் முடித்த நேரம். ஜனவரி 31-ல் எங்களது திருமணம் நடந்தது. அதன்பின் மார்ச் மாதம் எனக்குப் பிறந்த நாள் வந்தது. ஒவ்வொரு கணவரும் தனது மனைவியானபின் வரும் முதல் பிறந்த நாளை சர்ப்பிரைஸ் கிப்ட் வாங்கிக் கொடுத்து கொண்டாடுவது வழக்கம்.

90’s கிட்ஸ்களை கண்களால் கிறங்கடித்த கண்ணழகி சிவரஞ்சனி : ஆளே அடையாளம் தெரியலயே

ஆனால் கேப்டன் அப்படிச் செய்யவில்லை. எனது பிறந்த நாளை கேப்டனின் உதவியாளர் அவரிடம் தெரிவிக்க கேப்டன் ஒன்றும் செய்யவில்லை. அவர் சினிமாவில் உச்சத்தில் இருந்ததால் வெளியேயும் எங்கும் செல்ல முடியவில்லை. அதே நேரம் பிறந்த நாளும் வர கேப்டன் அவர்கள் எனக்கு சர்பிரைஸாக ஒரு தங்க டாலர் பரிசளித்தார். அந்த டாலரில் என்ன சிறப்பம்சம் என்றால் அதில் V என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். இதுதான் எனக்கு அவர் முதன் முதலில் கொடுத்த கிப்ட் என்று அந்தப் பேட்டியில் பிரேமலதா கூறியுள்ளார்.

இன்றும் அந்த டாலரை அவர் பத்திரமாக வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். பிரேமலதாவின் இந்த பேட்டியைக் கண்ட விஜயகாந்த் ரசிகர்கள் கேப்டன் அவர்களே உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கிப்ட் தான் என்று கமெண்ட்ஸ்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு, தான் வாழ்ந்த காலத்திலேயே பொன்மனச் செம்மலாக விளங்கி அணையாத அட்சய பாத்திரமாய் இல்லை என்று வந்தோர்க்கெல்லாம் பசிப் பிணியாற்றி உதவிய கரங்களுக்குச் சொந்தக்காரர் விஜயகாந்த்தின் மனித நேயத்தைக் கேட்க கேட்க இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்று வியக்கவே தோன்றுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews