ஒவ்வொரு வார இறுதியிலும் இதைத் தவறாமல் செய்த கேப்டன் விஜயகாந்த் டீம்.. அரசியலுக்கு அடித்தளம் போட்ட 20 ஆண்டு வரலாறு..

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவி ஜெயலலிதா  உள்ளிட்ட தலைவர்கள் எப்படி தங்களின் அரசியல் வருகைக்கு முன்னர் சினிமாவினை ஒரு கருவியாக பயன்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கைப் பெற்றார்களோ அதே பாணியில் மக்களோடு மக்களாக, எளியவர்களிடம்  அன்பு காட்டி, பாட்டாளிகளின் தோழனாக விளங்கி அரசியலில் குதித்தவர் தான் கேப்டன் விஜயகாந்த்.

தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து சில வருடங்கள் கழித்து இப்ராஹிம் ராவுத்தருடன் ஏற்பட்ட நட்பானது அவரை திரையிலும் மட்டுமல்லாது, மக்கள் பணியிலும் ஈடுபட வைத்திருக்கிறது.

இயல்பாகவே கேப்டன் விஜயகாந்தின் நல்ல குணங்களை அறிந்த இப்ராஹிம் ராவுத்தர் அவரை அரசியலுக்குத் தயார் படுத்தியிருக்கிறார். இதற்காக மக்கள் பணிகளை விஜயகாந்த் மன்ற நிர்வாகிகள் மூலம் செய்து கேப்டன் விஜயகாந்தை கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் இடம்பிடிக்க வைத்திருக்கின்றனர்.

சவால் விட்ட எம்.எஸ்.வி.. ஒரு எழுத்தையே முழு பாட்டாக்கி கண்ணதாசன் செய்த அற்புதம்..

கேப்டன் விஜயகாந்தின் அரசியல் வளர்ச்சியில் அவர் நண்பர்களின் பங்கு அலாதியானது. இதுபற்றி கேப்டன் விஜயகாந்தை வைத்து நெறைஞ்ச மனசு படத்தினை இயக்கிய இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி கூறும் போது, “ஷூட்டிங் நாட்களில் கேப்டன் விஜயகாந்தைப் பார்க்கவும், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் கூட்டம் ஏராளமாகக் குவியும். தங்கள் குறைகளை அவரிடம் கூறுவார்கள். அவரோ, ”நான் கட்சி ஆரம்பிக்கிற பொழுது எனக்கு ஓட்டுப் போடுங்க..” என்று கூறுவார். மேலும் கேப்டன் கேப்டன் என்று உயிரை வடும் ரசிகர்களை அரவணைத்து அவர்களை தனது ஆளுமையால் அமைதிப் படுத்துவார்.

கேப்டனின் அரசியல் வளர்ச்சிக்காக ஒரு டீம் சுமார் இருபது ஆண்டுகள் உழைத்துள்ளது. அவரது நண்பர்கள் லியாகத் அலிகான் உள்ளிட்டோர் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் சென்று அந்த வாரம் மன்றத்தின் செயல்பாடுகள் எப்படி? அடுத்து என்ன செய்யலாம் என்று சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டத்தினை நடத்தி வந்தார்களாம். இது ஒருமுறை கூட அவர்கள் நிறுத்தியதில்லை.“ என்று பேட்டி ஒன்றில் சமுத்திரக்கனி கூறியிருக்கிறார்.

இவ்வாறு 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தேமுதிகவின் வளர்ச்சி, விஜயகாந்த் நல்ல நிலையில் இருந்த போது மற்ற கட்சிகளை மிரள வைத்தது. அதன்பின் அவரின் உடல் நலம் குன்றிய நிலையில் கட்சி இருந்தவர்களும் மாற்றுக் கட்சியில் இணைய தேமுதிகவின் பலம் குறைந்து இன்று அவர் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.