“எரிமலை எப்படி பொறுக்கும்..?“ கம்யூனிசவாதியாக தூங்கக் கூட நேரம் இல்லாமல் நடித்த கேப்டன் விஜயகாந்த்.. சப்தமில்லாமல் செஞ்ச சாதனை

வாய்ப்பு என்பது ஒருமுறைதான் கிட்டும் என்பார்கள். கருப்பு நிறமும், கிடுகிடுவென வளர்ந்த தேகமும், சுருட்டை முடியும் கொண்டு கோலிவுட்டில் கால் பதித்து இன்று மறைந்தாலும் எண்ணற்ற மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருப்பவர்தான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். இவரைப்பற்றி எத்தனையோ செய்திகள் வந்தாலும் இவரின் தொழில் பக்தி குறித்து யாரும் அறிந்திராத செய்தி இது.

1981ம் ஆண்டு கோலிவுட்டில் விஜயகாந்தின் வருடம் என்றே சொல்லாம். தூங்க கூட நேரமே இல்லாமல் தொடர்ந்து ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாராம். அவ்வாறு ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்துக் கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு. வில்லனாகத் தொடங்கி பின்னர் ஹீரோவாக பல படங்களில் நடித்தார். அவர் படங்களில் அதிகமாக ரசிக்கப்பட்டதே ரியல் ஆக்‌ஷன் காட்சிகள் தான்.

பாடலுக்கு அர்த்தம் தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்ட டி.எம்.எஸ்., சந்தேகத்தை தீர்த்து வைத்த கிருபானந்த வாரியார்..

விஜயகாந்தை வைத்து படம் எடுத்தால் போட்ட காசை எடுத்து விடலாம் என்பது பல தயாரிப்பாளர்களின் கணக்காகவே இருந்தது. அத்தனை தத்ரூபமாக இருக்கும். பின்னாளில் தன்னை எமோஷனல் ஹீரோவாகவும் காட்டி இருந்தார். அவரின் எல்லா படங்களுமே மினிமம் கியாரண்டி தான். ஏவிஎம் தயாரிப்பில் சிவப்பு மல்லி படத்தில் அவர் தான் நடிக்க வேண்டும் என்பதில் அந்த நிறுவனம் உறுதியாக இருந்துள்ளனர். பின்னர் விஜயகாந்தை ஹீரோவாக வைத்து இப்படத்தின் பூஜை 1981ம் ஆண்டு ஜூன் 20ல் நடந்தது.

ஆனால் படத்தினை ஆகஸ்ட் 15ல் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று நிபந்தனை. இருப்பதோ 56 நாள் தான். ஆனால் இவருக்கு 35 நாட்களில் மொத்த ஷூட்டிங்கை முடிக்க வேண்டும். இதே நேரத்தில் கமல்ஹாசனுடன் சாட்சி படத்திலும் நடித்து வருகிறார். காலையில் சேலத்தில் நடக்கும் சாட்சி படப்பிடிப்பை முடித்து விடுவார்.

மாலையில் மதுராந்தகத்தில் நடக்கும் சிவப்பு மல்லி ஷூட்டிங்கிற்கு வருவாராம். இரவு முழுதும் நடித்து கொடுத்துவிட்டு காலையில் மீண்டும் சேலம் திரும்பி விடுவாராம் கேப்டன். இப்படியாக கொஞ்சமும் ஓய்வும் இல்லாமல் அந்த படத்தில் நடித்து கொடுத்தாராம். இதுமட்டுமன்றி மேலும் சில நேரங்களில் படப்பிடிப்பை அட்ஜஸ்ட் செய்து காலை ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டு சொன்னபடி 35 நாட்களில் படத்தினை முடித்துக் கொடுத்துள்ளார் கேப்டன் விஜயகாந்த்.  கடைசியில் ஏவிஎம் திட்டமிட்டது போல சிவப்பு மல்லி படம் சரியாக ஆகஸ்ட்15ந் தேதி ரிலீஸாகி வெற்றி பெற்றது.

இந்தப் படத்தில் தான் விஜயகாந்தின் புகழ்பெற்ற பாடலான எரிமலை எப்படி பொறுக்கும் என்ற பாடலும், வாகை சந்திரசேகருக்கு ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் என்ற டூயட் பாடலும் சங்கர் கணேஷ் இசையில் வெளியாகி மெஹா ஹிட் ஆனது. இதில் கேப்டன் விஜயகாந்த் கம்யூனிசவாதியாக நடித்திருப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...