பாடலுக்கு அர்த்தம் தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்ட டி.எம்.எஸ்.. சந்தேகத்தை தீர்த்து வைத்த கிருபானந்த வாரியார்!

பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் தான் பாடப் போகும் பாடல்களின் அர்த்தம் தெரிந்த பின்னரே அப்பாடலைப் பாடுவார். அப்போது தான் அவரும் உணர்ச்சி ததும்ப பாடலைப் பாடவும், கேட்பவர்களுக்கும் ஒன்றிப் போகும் வகையிலும் இருக்கும் என்று உணர்ந்தவர். இதனிடையே இவரிடம் அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது இயற்றிய திருப்புகழ் பாடல் அவரின் வரலாற்றினைப் படமாக்கும் போது அதில் பதிவு செய்யப்பட்டது. அவ்வாறு இன்றும் முருகக் கடவுள் திருத்தலங்களில் ஒலிக்கும் அந்தப் பாடல்தான் ‘முத்தைத்தரு பத்தித் திருநகை‘ என்ற அருணகிரிநாதரின் செய்யுள்.

இந்தப் செய்யுளைப் பாடலாகப் பதிவு செய்யும் போது டி.எம்.எஸ்-க்கு பாடலின் அர்த்தம் தெரியவில்லையாம். பலரிடம் கேட்டபொழுதும் யாருக்கும் தெரியமால் விழிக்க அப்பாடலைப் பாட மறுத்துள்ளார். இறுதியில் இந்தப் பாடலுக்கான விளக்கத்தை கிருபானந்த வாரியாரிடம் கேட்போம் என்று டி.எம்.எஸ் செல்ல கிருபானந்த வாரியார் ஒவ்வொரு அடிக்கும் விளக்கம் கூறியுள்ளார்.

இளம் வயதில் கிழவி வேடம்..! மிரள வைத்த நடிப்பு.. தமிழ் நாடகத் தந்தை என்றால் சும்மாவா?

முத்தைத்தரு பத்தித் திருநகை …
(வெண்முத்தை நிகர்த்த, அழகான
பல்வரிசையும் இளநகையும் அமைந்த..)
அத்திக்கு இறை …
(தெய்வயானை அம்மைக்குத் தலைவரே…)
சத்திச் சரவண…
(சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே…)
முத்திக்கொரு வித்துக் குருபர…
(மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
விதையாக விளங்கும் ஞான குருவே…)
இப்படியாக ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருளை வாரியார் விளக்கமாக எடுத்துச் சொல்ல சொல்ல, அதை கவனமாக கேட்டுக் கொண்டு, அதன் பிறகே ‘அருணகிரிநாதர்’ படத்தின் அந்தப் பாடலைப் பாடினாராம் டி.எம்.எஸ்.

உலகநாயகன் கமல்ஹாசனை கே.பாலச்சந்தரிடம் அறிமுகப்படுத்தியத பிரபலம்.. ஆண்டவர் சினிமாவுக்கு கிடைத்த அருமையான சம்பவம்

ஆனால் அதே பாடலை வாரியாரின் உயிரற்ற உடல் அருகே அமர்ந்து பாட வேண்டிய சூழ்நிலை வரும் என அப்போது நினைத்து பார்க்கவில்லை டிஎம்எஸ். ஏனெனில் தனது ஆன்மீகப் பயணத்தினை முடித்துக் கொண்டு கிருபானந்தவாரியார் விமானத்தில் தாயகம் திரும்பி வரும் வேளையில் விமானத்திலேயே அவரது உயிர் பிரிந்திருக்கிறது. அவரது இறுதிச் சடங்கில் கண்ணீர் விட்டு அழுது அவருக்கு திருப்புகழ் அஞ்சலியை செலுத்தியிருக்கிறார் டி.எம்.எஸ்.

வாரியார் தன்ன் இறுதிக் காலம் நெருங்குவதை பல வருடத்திற்கு முன்பே இப்படி சொல்லி இருந்தார் : “என் வாழ்வின் முடிவு எப்படி இருக்கும் என்பதை என் அப்பன் முருகப் பெருமான் என்றோ எனக்கு சொல்லி விட்டான். தன் வாகனமான மயிலை அனுப்பி, எந்த ஒரு கஷ்டமும் எனக்கு இல்லாமல் அந்த வானத்துக்கு என்னை எடுத்துக் கொள்வான் என் அப்பன் முருகன்…” வாரியார் சொன்ன அந்த வார்த்தைகளின்படியே விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போதே உயிர் பிரிந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...