கேப்டன் மில்லர் படம் எடுத்த இடத்துக்குப் போலாமா பாஸ்… சூட்டிங் ஸ்பாட் இருந்த இடம் இதுதான்..!

பொங்கலுக்குத் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் தனுஷ் நடித்த படம் கேப்டன் மில்லர். இந்தப் படம் எங்கு படமாக்கப்பட்டுள்ளது? அங்கு எப்படி செல்ல வேண்டும் என்று பார்ப்போமா…

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகில் உள்ள மத்தளம்பாறையில் தான் கேப்டன் மில்லர் படத்தின் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தில் வரும் சண்டைக்காட்சிகள், சென்டிமென்ட் என பல முக்கியமான காட்சிகள் இங்குள்ள பாறையின் அருகில் தான் செட் போட்டு எடுக்கப்பட்டுள்ளன. அங்கு செல்வதற்காக ஒரு வழித்தடத்தையே உருவாக்கியுள்ளனர்.

மத்தளம்பாறைக்குப் பக்கத்தில் அதாவது இடது பக்கத்தில் தான் பழைய குற்றால அருவி உள்ளது. இங்கு செட் போட்ட இடத்திற்கு யாரையும் வர அனுமதிக்கவில்லை. இங்கு முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்குள்ள தோட்டக்காரர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இங்கு உள்ள கோவிலும், குடிசைகளும் தான் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் வருகிறது. இப்போது அவை எல்லாம் தகர்க்கப்பட்டு உள்ளன. படத்தில் கிணறு போல 2 செட் போடப்பட்டுள்ளன. இது ஆழம் குறைவானது. மேலும் கோவில் தூண்கள் பலவும் செட் போடப்பட்டு இருந்தது.

பார்ப்பதற்கு பாறை மாதிரியே தத்ரூபமாக இருக்கும். ஆனால் அதைத் தூக்கினால் லேசாக அட்டைப்பெட்டியைத் தூக்கியது போலவே இருக்கும். அதே போல கல் மாதிரியே இருக்கும். அதைத் திருப்பிப் பார்த்தால் தெர்மோகோல். கலசம் மாதிரியே இருக்கும். அதைத் திருப்பிப் பார்த்தால் அட்டை. உள்ளே எல்லாமே கூடு மாதிரி தான் இருக்கும்.

Village
Village

ஆனால் எல்லாமே தத்ரூபமாக பண்ணிய செட் அப்கள் தான். பார்ப்பதற்கு நிஜம் போலவே காட்சியளிக்கும். அதுதான் சினிமா. இங்குள்ள இந்த இடத்தை நேரில் போய் பார்த்தால் ஒரு கிராமம் அழிந்து போய் நிசப்தமாக இருப்பது போல இருக்கும். ஆனால் படத்தில் இந்த இடம் ஒரு நிமிடம் கூட அமைதியாக இருக்காது. எங்கு பார்த்தாலும் துப்பாக்கி சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். படத்தில் இந்த மரம் அடிக்கடி காட்டப்படும்.

Tree
Tree

குழந்தைகள் வருவதற்காகத் மரத்தொட்டில் கட்டிப் போடுவார்கள். வளையல், தொட்டில் எல்லாமே இருக்கும். இங்குள்ள பனைமரத்தின் அருகில் அரண்மணை இருப்பது போல் காட்டியிருப்பார்கள். படத்தில் காட்டும்போது ரொம்பவே அருமையாக இருக்கும். படத்தின் ஓபனிங் சீனே இங்குள்ள குடிசையில் தான் ஆரம்பிக்கும். இந்தக் கோவில் எப்படி கட்டினாங்கன்னு படத்தோட ஆரம்பத்தில் தனுஷின் அம்மா சொல்லிக்கிட்டு இருப்பாங்க.

Well
Well

இங்குள்ள நந்தி மட்டும் கல்லிலே மட்டும் செய்தது. இந்த மலைப்பகுதியை பெரும்பாலும் வில்லன்கள் தான் பயன்படுத்திருப்பாங்க. அங்கு இருந்து கிராமத்தைத் தாக்குவாங்க. மலைக்கும், கிராமத்துக்கும் இடையில் ஒரு மரப்பாலம் உள்ளது. இதைத் தாண்டி தான் கிராமத்துக்குப் போக முடியும். அங்கு ஓடும் ஆற்றில் தான் வெடிகுண்டு காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டு இருக்கும். பழைய குற்றாலம் போகிற வாய்க்கால் தான் இந்த இடம்.

மத்தளம்பாறையில் இருந்து பழையகுற்றாலம் போகிற இடத்தில் நாலுமுக்கு உள்ளது. அங்கிருந்து செட் பக்கமாக போகவேண்டும். அங்கு தோட்டமும், வயலுமாக வரும். அப்படிப்போகும் போது ஒரு ஆறு வரும். அது பழைய குற்றாலத்தில் இருந்து வரும் ஆறு. அங்கு வலது புறத்தில் மிகப்பெரிய பாறையும், செட் போட்ட இடமும் இருக்கும். இந்த மலையடிவாரத்துக்கு அடியில் அடிக்கடி ஒரு ஒத்தக்கொம்பு காட்டு யானை வருமாம். இப்போது 2 யானைகள் வருகிறதாம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.