மொறுமொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யலாமா?

50645d0025ca73c8d5d81387346658f4

உருளைக் கிழங்கு சிப்ஸ் குழந்தைகள் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடும் நொறுக்குத் தீனி வகையாகும், இதனை நாம் கடைகளில் வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்த்து வீட்டில் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க.

தேவையானவை :

உருளைக்கிழங்கு – 1/2 கிலோ
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

1. உருளைக்கிழங்கை கழுவி வட்டவடிவில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து வெள்ளைத் துணியில் உருளைக் கிழங்கினைப் போட்டு உலர்த்தவும்.
3. அடுத்து அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெயை ஊற்றி உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுத்தால் உருளைக் கிழங்கு சிப்ஸ் ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.