சர்க்கரை நோயாளிகளுக்கான சுரைக்காய் கடைசல்!!

1ddf3b4a3868680b7c039f9db63b341c

சுரைக்காய் நீர்ச் சத்துமிக்க காய் வகையாகும், அதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தயங்காமல் சாப்பிடலாம், அந்த சுரைக்காயில் கடைசல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
சுரைக்காய் – 1
வெங்காயம் – 2
பூண்டுப்பல் – 3
தக்காளி – 1
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
தேங்காய் – 1 துண்டு
சீரகம் – 1/4 டீஸ்பூன்
கடுகு- சிறிதளவு
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:
1.    முதலில் சுரைக்காயில் உள்ள விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து வெங்காயம், பூண்டு, தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து தேங்காய் மற்றும் சீரகத்தினை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, தக்காளி, சுரைக்காய், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
3.    குழைய வெந்ததும் அதனை நன்கு கடைந்து தேங்காய்க் கலவையினை போடவும்.
4.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கடைசலில் கொட்டி இறக்கினால் சுரைக்காய் கடைசல் ரெடி.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews