சிவாஜியை பார்த்து படத்தில் நடிக்க மறுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

நடிகர் திலகத்தின் திரை வரலாற்றில் மிக முக்கியமான படமாக அமைந்த ஒன்று கௌரவம். வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் அப்பா, மகனாக சிவாஜி நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் சிவாஜியுடன் இணைந்து பண்டரிபாய், மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், விகே ராமசாமி, செந்தாமரை, ஒய் ஜி மகேந்திரன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர். கண்ணன் வந்தான் என்ற மேடை நாடகத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்த திரைப்படம் தான் கௌரவம்.

மெட்ராஸ் ஹைகோர்ட் பாரிஸ்டர் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் சிறப்பாகவும் தத்ரூபமாகவும் நடித்திருப்பார். தனது சொந்த உழைப்பால் சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தவர் ரஜினிகாந்த். தனது வாழ்நாளில் எந்த ஒரு வழக்கிலும் தோற்காதவர். வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் மதிப்போடும், பக்தியோடும் காணப்படும் ரஜினிகாந்த் வாதாடுவதில் ஒரு சிங்கம். தனது எதிரில் யார் நின்றாலும் தனது வாதாடும் திறனால் அவர்களை சாம்பலாக்கி விடும் திறமை உடையவர். அவரது ஒரே லட்சியம் இறப்பதற்குள் நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான். அதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டாலும் அவரது ஈகோ,கோபம் ஒரு குறைபாடாக இருந்துள்ளது.

ரஜினிகாந்த் தன் மகன் கண்ணனை தன்னைப்போல ஒரு வெற்றி கரமான வழக்கறிஞராக இருக்க விரும்புகிறார். ஆனால் கண்ணனோ ரஜினிகாந்துக்கு நேர் எதிர் குணாதிசயங்களை கொண்டவர். சந்தர்ப்ப சூழ்நிலையால் காலத்தின் கட்டளையாய் ஒரு சமயத்தில் கண்ணன் ரஜினிகாந்தை எதிர்த்து வாதாடும் தருணம் ஏற்படுகிறது. இறுதியில் ஜெய்ப்பது கண்ணனின் நேர்மையா அல்லது ரஜினிகாந்தின் கவுரவமா என்பதுதான் இந்த படத்தின் கதை.

ஒரு வெற்றிகரமான திரைப்படத்திற்குரிய எல்லா அம்சங்களும் மிக சிறப்பாக அமைந்து தயாரிக்கப்பட்ட இந்த படம் வசூலிலும் சரி விமர்சனங்களிலும் சரி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. திரை கதையும், பாத்திர வடிவமைப்பும் இந்த படத்துக்கு மிகப்பெரிய தூண்கலாக அமைந்தது. கண்ணன் நீதி, நேர்மை, அன்பு, காதல் என்று கிருஷ்ணனுக்கு உரிய எல்லா குணாதிசயங்களோடு சித்தரிக்கப்படுகிறார். ரஜினிகாந்த் தனது உழைப்பை மட்டும் தெய்வமாக நம்பும் ஒரு நாத்திகர். ரஜினிகாந்த் தனது வாத திறமையினாலும் சட்டத்தின் ஓட்டைகளை கொண்டு குற்றவாளிகளை காப்பாற்றும்போது அவருக்கு எதிராக நின்று கண்ணன் பெற்ற வெற்றி தீமைக்கு எதிரான வெற்றியை நிரூபிக்கிறது.

கௌரவம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க ஒப்புக்கொண்டு படத்தை பார்க்க பிரபல ஹிந்தி நடிகர் திலீப் குமார் கௌரவம் படத்தை தமிழில் ஒலிப்பதிவு செய்தவரே ஹிந்தியில் ஒலிப்பதிவு செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் தன்னை நேரில் வந்து சந்திக்கும்படி படத்தின் ஒளிப்பதிவாளர் வின்செட் அவரை கேட்டுக்கொண்டார். அதன்படி வின்சென்ட் அவரை போய் சந்தித்தபோது படத்தில் வயதான சிவாஜி, இள வயது சிவாஜியை விட சற்று உயரமாக தெரிகிறார். இது எப்படி சாத்தியமானது எந்த மாதிரியான கேமரா டெக்னிக் பயன்படுத்தினீர்கள் என்று வின்சென்டை கேட்டார் திலீப்குமார். இதில் கேமரா டெக்னிக் ஒன்றும் இல்லை என ஒலிப்பதிவாளர் வின்செட் கூறியுள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜியை நேரில் சந்தித்து கதை சொல்லிய பாலா! அந்த சிங்கத்திடம் பட்ட பாடு என்ன?

வயதான கதாபாத்திரத்தில் சிவாஜி நடிக்கும் பொழுது அந்த ரோளுக்கு உண்டான கம்பீரம், முரட்டுத்தனம், பாடி லாங்குவேஜ் எல்லாமே வந்துவிடும். தானாகவே நெஞ்சம் நிமிர்ந்து கொள்ளும் அதனால் கண்ணன் ரோலுக்கான மேக்கப்பை போடும்பொழுது அதற்கு தேவையான படி பணிவு கூச்சம் எல்லாம் சேர்ந்து அவரை இயல்பாக காட்டியிருப்பார் என்று வின்சென்ட் சொல்ல அதை கேட்டு பிரமித்து போன திலீப் குமார் இந்த உயர வித்தியாசங்களுக்கு உங்க கேமரா டெக்னிக் தான் பயன்படுத்தினீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நடிப்பிலேயே அந்த வித்தியாசத்தை காண்பிக்க சிவாஜி ஒருவரால் தான் முடியும் வேறு எவராலும் முடியாது நான் எதற்கு ஒருமுறை யோசித்து சொல்கிறேன் என்று சொல்லி வின்சென்டை அனுப்பி வைத்தார் திலீப்குமார்.

ஆனால் சில நாட்களுக்கு பிறகு அந்த படத்தையே கைவிட்டார் திலீப்குமார். பல வருடங்களுக்குப் பிறகு சிவாஜி கணேசன் தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடருக்காக மீண்டும் கௌரவம் என்ற தலைப்பில் ரஜினிகாந்தின் பாத்திரத்தை மறுபடியும் ஏற்று நடித்தார். மக்கள் மத்தியில் பெரும் பாராட்டும் வரவேற்பும் பெற்ற தொடராக அமைந்தது. அதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் அந்த தொடரில் இளைய திலகம் பிரபுவும் நடித்துள்ளார். காலங்கள் கடந்தாலும் சிவாஜியின் கௌரவம் அவருக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் கௌரவம் சேர்த்த ஒரு படம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...