ஆயுத எழுத்து ஹீரோயின் விவாகரத்து!.. ஆடிப்போன தர்மேந்திரா குடும்பம்.. என்ன ஆச்சு?..

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மற்றும் ஹேமா மாலினியின் மூத்த மகள் இஷா தியோல் தனது கணவருடன் இனிமேல் சேர்ந்து வாழப்போவது இல்லை, இத்துடன் திருமண வாழ்கையை முடித்துக் கொள்கிறேன் என அறிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய ஆயூத எழுத்து திரைபடத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள இஷா தியோலின் இந்த அறிவிப்பு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

முன்னாள் பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு தற்போது 88 வயதாகிறது. அவரின் முதல் மனைவிக்கு சன்னி தியோல் மற்றும் பாபி தியோல் என இரு மகன்கள் உள்ளனர். மேலும் நடிகர் தர்மேந்திரா இரண்டாவதாக நடிகை ஹேமா மாலினியை திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் இஷா தியோல்.அஹானா என இரு மகள்கள் உள்ளனர்.

இஷா தியோல் விவாகரத்து:

இஷா தியோல் சினிமா குடும்பத்தில் பிறந்ததால், அவரும் 2002ம் ஆண்டு வெளியான கொய் மெரே தில் சே பூச்சே படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இஷா தியோல் நடித்திருந்தார். அம்மாவை போலவே இஷாவுக்கும் அழகான 2 பெண் குழந்தைகள் தான் பிறந்தனர்.

இந்தி படங்களில் பிஸியாக இருந்த இஷா தியோல் 2015ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.இஷா தியோல் 42 வயதிற்கு பிறகு சமீபத்தில் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடங்கியுள்ளார்.

இஷா சிறு வயதிலிருந்தே தான் காதலித்து வந்த பரத் தக்தானி என்பவரை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ராத்யா, மிராயா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 11 வருடங்கள் நகமும் சதையுமாக இணைந்து வாழ்ந்து வந்த இருவரும் தற்போது பிரியப்போவதாக அறிவித்துள்ளனர்.

தர்மேந்திரா – ஹேமா மாலினி மகள்:

சமீப காலமாக காதல் திருமணம் செய்துக் கொண்ட பல பிரபலங்கள் திருமண பந்தத்தில் இருந்து அதிரடியாக விலகி வருகின்றனர். அதிலும், பாலிவுட்டில் ஏகப்பட்ட விவாகரத்து ஏற்பட்டு வருகின்றன. தமிழ் சினிமாவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து, தெலுங்கில் சமந்தா – நாக சைதன்யா விவகாரத்து என தொடர்ந்து திருமண வாழ்க்கையில் இருந்து விலக பிரபலங்கள் முடிவெடுத்து வருவது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் எனக் கூறுகின்றனர்.

அப்பா தர்மேந்திரா இரண்டாவதாக அம்மா ஹேமா மாலினியை திருமணம் செய்துக் கொண்டது போல இஷா தியோல் இன்னொரு திருமணம் செய்யப் போகிறாரா? என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன. கடந்த ஆண்டு இஷா தியோலின் அண்ணன்களான சன்னி தியோல் மற்றும் பாபி தியோல் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இவரும் மீண்டும் நடிக்கப் போகிறாரா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.