டைட்டில் வின்னரை விட அதிக சம்பளம் மைனாவுக்கா? அதிர்ச்சி தகவல்!

பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை பெறுபவரை விட நேற்று வெளியேற்றப்பட்ட மைனாவுக்கு அதிக சம்பளம் என்ற தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இறுதி போட்டிக்கு தற்போது மூன்று பெயர்கள் மட்டும் தகுதி பெற்றுள்ளனர் என்பதும் அவர்கள் விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் என்பதும் தெரிந்ததே. நேற்று திடீரென மிட் வீக் எவிக்சனாக மைனா வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 103 நாட்களில் பிக் பாஸ் வீட்டில் இருந்த மைனாவுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் என்றும் அதனால் அவருக்கு ஒரு கோடிக்கு மேல் கிடைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் மைனா இருந்தபோது தனது சம்பளம் குறித்து கூறினார் என்பதும் அவர் தனக்கு ஒரு லட்சம் சம்பளம் என்று கூறிய போது தனலட்சுமி ஆச்சரியத்தில் வாயை பிளந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஒரு கோடிக்கு மேல் மைனாவுக்கு சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒருவேளை இந்த சீசனின் டைட்டிலை விக்ரமன் பெற்றால் அவருக்கு தினமும் 15 ஆயிரம் சம்பளம் என்று கூறப்படும் நிலையில் 15 லட்சம் தான் அவருக்கு மொத்த சம்பளமாக கிடைக்கும். மேலும் டைட்டில் வின்னருக்கான ஐம்பது லட்சத்தை சேர்த்தாலும் அவருக்கு 65 லட்சம் மட்டுமே கிடைக்கும்.

அதே போல் ஒருவேளை அசீம் இந்த சீசனின் டைட்டில் வின்னராக வென்றால் அவருக்கு 25000 சம்பளம் என்று கூறப்படும் நிலையில் 25 லட்சம் மட்டுமே சம்பளம் கிடைக்கும் என்பதும் டைட்டில் வின்னர் பணத்தையும் சேர்த்து 75 லட்சம் மட்டுமே சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக அசீம் அல்லது விக்ரமன் என யார் டைட்டில் பட்டதை வென்றாலும் இவர்கள் இருவரை விட அதிகமாக சம்பளம் பெற்றது மைனா தான் என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மைனா பிரபலமானவர் என்பதால் அவருக்கு தான் இந்த சீசனிலேயே அதிக சம்பளம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்துக்கு ஏற்றவாறு பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டாரா என்றால் அது கேள்விக்குறியாக தான் இருக்கும். பெரும்பாலும் அவர் அமுதவாணனின் நிழலிலேயே இருந்ததாகவும் பிறருடைய ஆலோசனை கேட்டே நடந்ததாகவும் தனது சொந்த கருத்தில் அவரை விளையாட வில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் காமெடியாக பார்வையாளர்களை என்டர்டெயின்மென்ட் செய்தார் என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

கடந்த சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய சம்பளம் வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த சீசனில் கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களுக்குமே ஆயிரத்தில் தான் சம்பளம் இருந்தது என்பதும் அதற்கு காரணம் பிரபலம் இல்லாத போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆறு சீசன்களில் இந்த சீசன் தான் மிகவும் மந்தமாக சென்ற சீசன் என்றும் மிக மோசமான சீசன் என்ற பெயரையும் பெற்றது. இந்த சீசனில் விக்ரமன், ஷிவின், ஜனனி உள்பட ஒரு சிலர் மட்டுமே திருப்தியான போட்டியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இனிவரும் சீசனிலாவது சம்பளத்தை கணக்கில் கொள்ளாமல் நல்ல போட்டியாளர்களை தேர்வு செய்தால் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து மக்கள் மனதில் இடம்பெறும் என்றும் இல்லையென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொதுமக்கள் ஒதுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Bala S

Recent Posts