பிக்பாஸ் டைட்டில் வின்னரின் அடுத்தப் படம்… பூஜையுடன் தொடங்கியது…

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இன் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் தமிழ் திரைப்பட நடிகர் ஆவர். இவர் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வெளியான ‘ரெட்டச்சுழி’ என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நெடுஞ்சாலை, 2015 ஆம் ஆண்டு வெளியான மாயா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். எனினும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம், தனது தனித்துவமான, அன்பான, சுயநலமற்ற குணத்தினால் மக்களின் ஆதரவை பெற்றவர்.

‘நெடுஞ்சாலை ‘ படத்தில் இவரது நடிப்பு அனைவரின் பாராட்டைப் பெற்றது. ‘சில்லுனு ஒரு காதல்’ புகழ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் உருவான ஆக்ஷன்- காதல் திரைப்படம். 1980 களில் நெடுஞ்சாலையில் வாழும் மக்களைச் சுற்றி எடுக்கப்பட்ட கதை ‘நெடுஞ்சாலை ‘.

இதையடுத்து, மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிப்பில், இயக்குனர் எல். ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் , நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும் திரில்லர் திரைப்படம் ‘ரிலீஸ்’. இப்படத்தின் பூஜை எளிமையான முறையில் படக்குழுவினருடன் நடந்தது. அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. கதையின் நாயகியாக தீப்ஷிகா நடிக்கிறார். மேலும் இயக்குனர் சுப்ரமணிய சிவா, ஆராத்யா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சென்னையின் மைய பகுதியில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இதுவரை பார்த்திடாத சுவாரிஸ்யமான திரில்லர் அனுபவத்தை இப்படம் கொடுக்கும். சென்னையை ஒட்டி இருக்கும் மஹிந்திரா சிட்டி பகுதியில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளோம் என்று இயக்குனர் எல். ஆர். சுந்தரபாண்டி தெரிவித்துள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews