பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் லிஸ்ட்! அப்போ சண்டைக்கு பஞ்சமே இருக்காது!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் மனத்தில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி தான் விஜய் டிவியின் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது புதிதாக தொடங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 7 குறித்த அப்டேட் வர தொடங்கியுள்ளது.

இந்த தகவலுக்காக கோடிக்கணக்கான பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் 7ல் எந்த பிரபலங்கள் கலந்து கொள்ள போகிறார்கள், அவர்களின் தனித்திறமை, சம்பள விவரங்களை தெரிந்து கொள்வதில் தனி ஆர்வமே உள்ளது. போட்டியாளரின் பெயர்கள் மட்டும் தெரிந்தால் போதும் உடனே அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாக தொடங்கிவிடும்.

தற்பொழுது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் ஆல் தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ், பல்வேறு துறை பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு உலக அளவில் பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே நேரம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு சிலருக்கு பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தாலும் பலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருவதையும் மறுக்க முடியாது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்வதற்காக தயாராக உள்ள சில பிரபலங்களின் பட்டியலை முன்னணி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தொகுப்பாளராக பணியாற்றிய ஜாக்ளின், பிரபல சின்னத்துறை நடிகரான பப்லு, கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரக்க்ஷிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர் மற்றும் சமீபத்தில் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்ட கோவையை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா ஆகியோர் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யின் லியோ படப்பிடிப்பில் இணைந்த சிவகார்த்திகேயன்!

பிக்பாஸ் சீசன் 7-ஐ வருகிற அக்டோபர் 8ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல லட்சம் வியூவர்ஸ்களை தன் கைவசம் வைத்திருக்கும் விஜய் டிவி இந்த சீசனுக்கு தொகுப்பாளராக இருக்கும் கமல் அவருக்கு 150 கோடி சம்பளம் வழங்கவுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...