மாயாவையும் பூர்ணிமாவையும் பிரிச்சிடுங்க பிக் பாஸ்!.. ஒரே படுக்கை, ஒரே பாத்ரூம் என எல்லை மீறுறாங்க!..

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி ஆரம்பமானது. பல சர்ச்சைகளைக் கடந்து இந்த சீசனையும் கமல்ஹாசன் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து அவர் வெளியே அனுப்பியது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.

மாயா, பூர்ணிமா, ஐஷூ, ரவீனா, அக்ஷயா, ஜோவிகா உள்ளிட்ட பெண் போட்டியாளர்கள் தங்களுக்கு பிரதீப் ஆண்டனியால் பாதுகாப்பு இல்லை எனக்கு குற்றச்சாட்டை முன்வைத்து நிலையில், பிரதீப் ஆண்டனியை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.

பிரதீப் ஆண்டனி வெளியேற்றம்

கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி வெளியேறியதால் சமூக வலைதளங்களில் கமலஹாசனுக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பை சமாளிக்கும் விதமாக மாயா உள்ளிட்ட பெண் போட்டியாளர்கள் கொடுத்த புகாரின் பெயரில் தான் பிரதீப் வெளியேற்றப்பட்டார் என்பதை கமல் தெளிவுபடுத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது, கமல்ஹாசன் தங்களை கழட்டி விட்டு விட்டார் என்றும் வெளியே போனால் பிரதீப் ரசிகர்கள் தங்களை சும்மா விடமாட்டார்கள், நேரடியாக சென்று உண்மையை சொல்லப் போகிறேன் என்றெல்லாம் மாயா புலம்பி வருகிறார்.

மாயாவும் பூர்ணிமாவும் அலப்பறை

இது ஒரு புறம் இருக்க மாயாவும் பூர்ணிமாவும் ஐஷு வெளியேறியதற்கு பின்னர் அதிக அளவில் அட்டகாசங்கள் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

முன்னதாக ஐஷூவும் பூர்ணிமாவும் ஒன்றாக பாத்ரூமுக்கு சென்று வந்த நிலையில், தற்போது மாயாவுடன் பூர்ணிமா பாத்ரூமுக்கு சென்று வருவதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மாயா மீது ஏறிப் படுத்துக்கொண்டு பூர்ணிமா பகீர் கிளப்பி வருகிறார்.

ரொம்ப ஓவராக போகுது

மாயா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான சுசித்ரா சமீபத்திய யூடியூப் பேட்டியில் பகிரங்கமாக பேசியதால்தான் தற்போது ரசிகர்கள் மாயாவும் பூர்ணிமாவும் செய்யும் சேட்டைகளை பார்த்து ஷாக் ஆகி வருகின்றனர். கூடிய விரைவில் மாயா அல்லது பூர்ணிமா இருவரில் ஒருவரை வெளியே அனுப்பினால் மட்டுமே ஷோவை பார்க்க முடியும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசனில் பெண் போட்டியாளர்கள் தான் படுமோசமாக நடந்து கொள்வதாகவும் பிக் பாஸ் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதையெல்லாம் கமல்ஹாசன் கண்டு கொள்வதும் இல்லை, கேட்பதுமில்லை என அடிக்கடி கமலையும் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். இந்த சீசன் எப்படி முடியப் போகிறது என்றும் டைட்டில் வின்னராக யார் வருவார் என்றும் இதுவரை புரியாத புதிராகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews