முதல் மனைவியுடன் விவாகரத்து!.. இரண்டாவது காதலியை அறிமுகப்படுத்திய அபிஷேக் ராஜா!..

சினிமா விமர்சகராக இருந்த அபிஷேக் ராஜா பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானார். அபிஷேக் ராஜா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்தவர் என்று பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரும் அறிந்தனர். தற்போது அவர் தன் புதிய காதலியுடன் காதலர் தினத்தன்று எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அபிஷேக் ராஜா Fully Filmy எனும் யூடியூப் சேனலில் விமர்சகராக இருந்தார். பின்பு ஓப்பன் பண்ணா எனும் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி தமிழ் திரைப்படங்களின் விமர்சனங்களை கூறி பிரபலமானார். மேலும் அபிஷேக் ராஜா அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் ராஷி கன்னாவின் பாய் பெஸ்டியாக நடித்திருந்தார். அதை அடுத்து அவர் ஏ.ஆர். ரஹ்மான், கமல்ஹாசன், விஜய்சேதுபதி ஆகியவர்களோடு பேட்டிகளையும் தொகுத்துள்ளார். தற்போது இவரது விமர்சனத்தை பார்த்து படத்திற்கு போகலாமா வேண்டாமா என்னும் முடிவை எடுப்பவர்களும் பலர் உள்ளனர்.

யூடியூப் முதல் பிக் பாஸ் வரை:

அதன் பிறகு அபிஷேக் ராஜா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அவர் உள்ளே நடந்துக்கொண்ட விதம் பார்வையாளர்களுக்கு பிடிக்காததால் கலந்துக்கொண்ட 21 நாட்களிலேயே மக்களால் வெளியெற்றப்பட்டார். ஆனால் மீண்டும் வைல்கார்ட் போடியாளராக எண்ட்ரி கொடுத்த அவர் பிரியங்கா, நிரூப் ஆகியோருடன் கூட்டணி அமைத்து கச்சிதமாக விளையாடினார். மேலும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியையே பார்த்ததே இல்லை என பேசி பல விமர்சனங்களுக்கு ஆளானார்.

அபிஷேக் ராஜா தீபா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில வருடங்களிலேயே விவாகரத்து செய்துக் கொண்டனர். அதை தொடர்ந்து ஒரு பேட்டியில் பேசிய தீபா அபிஷேக் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் இவர் திருமணமானவர் என்பதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் அனைவருக்கும் தெரியவந்தது.

காதலியை அறிமுகப்படுத்தினார்:

இந்நிலையில், அபிஷேக் ராஜா காதலர் தினத்தை முன்னிட்டு தனது புதிய காதலியுடன் புகைப்படம் ஒன்றை இன்ஷ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் குறைகள் நிறைந்த என்னை ஒரு லைஃப் பார்ட்னராக மாற்றியதற்கும் என்னை விட்டுக்கொடுக்காததற்கும் நன்றி. இனிய காதலர் தின வாழ்த்துக்கள் சுவாதி. நான் ஏன், பார்ட்டிக்கு பின்னர் ஆதிபுருஷ் பிரபாஸ் போல இருக்கிறேன் என தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி , அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.