பிரம்மாண்ட இயக்குனரின் மகள் வாரிசு நடிகருடன் ஜோடி சேருகிறாரா..? அப்டேட் இதோ…

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்  ஷங்கரின் மகள் அதிதி. மருத்துவ பட்டப்படிப்பை முடித்த இவர் 2022 ஆம் ஆண்டு முத்தையா  இயக்கிய விருமன் என்ற படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் புதுமுக நாயகியாக அறிமுகமானார்.

aditi 2

முதல் படத்திலேயே பாவாடை தாவணியில் வலம் வரும் கிராமத்து பெண்ணாக நடித்து மக்கள் மனதில் தன் முகத்தை பதித்துவிட்டார். அதன் பின்பு மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனோடு இணைந்து மாவீரன் படத்தில் கொஞ்சம் மார்டன் பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார். நடிப்பு மட்டுமல்லாமல் இந்த இரு படங்களிலும் சொந்த குரலில் ஒரு பாட்டை பாடி இருந்தது பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

aditi 3

இப்போது ஏராளமான பட வாய்ப்புகள் அதிதியை  பிஸியாக வைத்திருக்கிறது. மூன்றாவதாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளியின் சகோதரரான ஆகாஷ் முரளிக்கு  ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

atharvaa4

இந்த நிலையில் எம் ராஜேஷ் இயக்கவிருக்கும் புது படத்தில் நடிகர் அதர்வாவுடன் ஜோடி சேர உள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் அதிதி சங்கர். இவரின் நடனத்தை பார்த்து சாண்டி மாஸ்டரே ஆச்சரியமடைந்தாராம். ஒரு தொழில் முறை நடன கலைஞர் போலவே நடனம் ஆடுவாராம்.

சாய் பல்லவிக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் டாக்டர் நடிகை அதிதி ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் தன் அப்பா பெயரில் தமிழ் சினிமாவில் நுழைந்தாலும், தனித்துவமாக நின்று சிறந்த நடிகை என்று பெயரெடுப்பேன் என்று சபதம் எடுத்துள்ளாராம் அதிதி ஷங்கர். பிரபலத்தின் வாரிசு என்பதால் அதிதி ஷங்கர் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...