இயக்குனர் பீம்சிங் மனைவி யார் தெரியுமா…? 2500 படங்கள் நடித்த நடிகை…!!

தமிழ் திரை உலகில் சிவாஜி கணேசன் நடித்த பல காலத்தால் அழியாத காவியங்களை இயக்கியவர் பீம்சிங் என்பது அனைவரும் அறிந்ததே. பதிபக்தி, பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாவ மன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பந்தபாசம், பார் மகளே பார் போன்ற பா வரிசை படங்களை இயக்கியவர்  பீம்சிங். சிவாஜிகணேசன் பீம்சிங் இணைந்த அனைத்து படங்களும் மிகச்சிறந்த வெற்றி படங்கள்.

இந்த நிலையில் பீம்சிங் ஒரு நடிகையை திருமணம் செய்து கொண்டார். அந்த நடிகை சுமார் 2500 படஙக்ளுக்கும் மேல் நடித்திருக்கிறார் என்பது அரிய தகவலாக உள்ளது. அவர் தான் நடிகை சுகுமாரி. அன்றைய கேரளாவின் பகுதியாக இருந்த நாகர்கோவிலில் பிறந்த சுகுமாரி சிறு வயதிலேயே படப்பிடிப்பை பார்க்கும் வாய்ப்பை பெற்றவர் என்பதால் அவருக்கு மிக இளம் வயதிலேயே சினிமா வாய்ப்பு கிடைத்து விட்டது.

நடிகை சுகுமாரி கடந்த 1956 ஆம் ஆண்டு  ஓர் இரவு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தின் கதை திரைக்கதையை பேரறிஞர் அண்ணா எழுதியிருந்தார். இதனை அடுத்து அவர் தூக்கு தூக்கி, மதுரை வீரன், ராஜா ராணி, சக்கரவர்த்தி திருமகள், மணமகள் தேவை, புதையல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜியுடன் நடித்திருந்தார்.

பாதி படப்பிடிப்பில் மறைந்த பீம்சிங்.. லட்சுமியின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தின் கதை..!!

பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் வில்லி கேரக்டரில் அசத்திருப்பார். எந்த விதமான கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடும் தன்மை உடையவர் சுகுமாரி.  வசந்த மாளிகை திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அண்ணன் கேரக்டரில் நடித்த பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போது அவர் சிவாஜியை குத்தி குத்தி காட்டும் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார்.

sukumari tribute 01

நடிகை சுகுமாரி மலையாளத்தில் தான் ஏராளமான படங்கள் நடித்தார். சுமார் 1500 படங்களுக்கு மேல் அவர் மலையாளத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்கள மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் நடிகை சுகுமாரி இருந்தார். தொலைக்காட்சி சீரியல்களிலும் மேடை நாடகங்களிலும் அவர் நடித்துள்ளார்.

ஏராளமான மலையாள சீரியல்களில் நடித்த நடிகை சுகுமாரி தமிழில் சுவாமியே சரணம் ஐயப்பா, கங்கா யமுனா சரஸ்வதி, இரவில் ஒரு பகல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். மேலும் ஏராளமான கலை நிகழ்ச்சிகளை அவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடத்தி உள்ளார். பீம்சிங் இயக்கிய பல திரைப்படங்களில் நடித்த சுகுமாரி பின்னர் அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகையர் திலகம் சாவித்திரி… 19 மாதங்கள் கோமாவில்… உதவ ஆளின்றி தவித்த இறுதிக்காலம்…!!

இந்த தம்பதிக்கு சுரேஷ் என்ற ஒரு மகன் உள்ளார். பீம்சிங் சுகுமாரியை திருமணம் செய்வதற்கு முன்பே சோனா என்பவரை திருமணம் செய்திருந்தார். பீம்சிங் சோனா தம்பதிக்கு எட்டு குழந்தைகள். இவர்களில் பி.லெனின் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த எடிட்டராக இருந்து வருகிறார். பி.கண்ணன் பாரதிராஜா படங்கள் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

நடிகை சுகுமாரி, பீம்சிங்கின் முதல் தார மனைவியின் குழந்தைகளான 8 குழந்தைகள்  மீதும் மிகுந்த அன்புடன் பாசமும் கொண்டு இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை சுகுமாரி கடந்த 2013 ஆம் ஆண்டு இதய நோய் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி மார்ச் 26 ஆம் தேதி காலமானார்.

தமிழ் சினிமாவின் அப்பா நடிகர்.. எஸ்.வி. ரங்காராவ் திரைப்பயணம்..!!

அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, சுகுமாரியின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதேபோல் கேரள முதலமைச்சராக இருந்த உம்மன் சாண்டி உள்பட பல பிரபலங்கள் அவரது மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து இருந்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews