Categories: ஜோதிடம்

சிவராத்திரி கிரிவலம் பலன்கள்

அருணாசல மாதரிவராத்திரி கிரிவல முறை, பலாபலன். ( 8.7.2021 )
அஷ்டவக்ர முனிவர் உரைத்தபடியாக பாரத நாடெங்கும் ஜனக மகராஜா புனிதத் தலங்களில் வழிபட்டுப் பன்முறை திருஅண்ணாமலையிலும் பூசித்து அருணாச்சல கிரிவலத்தை ஆற்றி வழிபட்டார். 
இதில் அஷ்டவக்ர மகரிஷியுடன் அருணாச்சல கிரிவலத்தை ஆற்றும் பாக்கியத்தைப் பெறுவதற்காக ஜனகராஜா முனிவரிடமே வேண்டினார். குருவுடன் மலைவலம் ஆற்றுதல் பெரும் பேறல்லவா. இதற்கான தெய்வீக வாய்ப்பு பிற்பாடு ஒரு மாதசிவராத்திரி நாளில் ஜனகராஜாவிற்குக் கனிந்தது. 

 இதன்படியாக ப்லவ வருடத்தில் அஷ்டவக்ர மஹரிஷியும், ராஜரிஷியாம் ஜனகரும் அருணாசல கிரிவலத்தை ஆற்றி வழிபட்ட திருநாள் (8.7.2021), இம்மாதச் சிவராத்திரி தினமாக வந்தமைகின்றது. தற்போதைய உலகச் சமுதாயம் பெறும் உத்தம பாக்யமிது.
 ஜனகராஜா பரிவாரத்தார் பெரும்பாலும் சமித்துக் குச்சிகள், பொன்னாங் கண்ணிக் கீரை போன்றவற்றைத் தாங்கி தம் பரிவாரத்துடன் பாதயாத்திரை புரிவார். இத்தகைய அபூர்வமான கிரிவல நாளில் நாமும் அருணாசல மாதசிவராத்திரி கிரிவலத்தைக் கடைபிடித்தல் விசேஷமானதாம்.

 அறிந்தோர் காரைக்கால் அம்மையார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகரின் மூத்தகோயில் திருப்பதிகம், கோயில் மூத்ததிருப்பதிகம், அடைக்கலப்பத்து போன்ற தேவாரம், திருவாசகம், திருவாசகம், திருப்புகழ், அருட்பாத் துதிகள், அஷ்டவக்ரரிஷி ஜனகருக்கு உபாசித்த அஷ்டவக்ர கீதை, சிவபெருமான் அம்பிகைக்கு வார்த்த குரு கீதை, லிங்காஷ்டகம் போன்ற துதிகளை’ ஓதியோ அல்லது பிறர் ஓதக் கேட்டோ| கிரிவலத்தை ஆற்றிடவும். 

எளிய வகையில் ‘அஷ்டவக்ர, ஜனகரிஷி பாஹிமாம், பாஹிமாம், அஷ்டவக்ர, ஜனக ரிஷி ரட்சமாம், ரட்சமாம்’ என்ற துதியை ஓதியும் மாதசிவராத்திரி கிரிவலத்தை ஆற்றிடலாம். 

வாழ்வில் பெரியோர்களின் ஆசிகள் இல்லாது வாடுவோர்க்குத் தக்க உத்தமர்களின் ஆசிகளைக் கனிவிக்கும்.
 புதல்வர், புதல்வியர் தம் சொற்படி கேளாது தான்தோன்றித்தனமாக வாழ்வதாக எண்ணி வருந்தும் குடும்பத்தார்க்குப் பிள்ளைகளைத் திருத்தி நல்வழி காட்டும் உத்தம அருணாசல கிரிவலசக்தித் திருநாள்.

Published by
Staff

Recent Posts