மஞ்சுளாவிற்கு இப்படியொரு துரோகத்தை செய்து விட்டார் விஜயகுமார்!.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் விஷயம்!..

மூத்த நடிகரான விஜயகுமார் பேத்தி தியாவின் திருமணம் கோலாகலமான கொண்டாட்டத்துடன் முடிந்தது. இந்நிலையில் தற்போது விஜயகுமார் அவரது இரண்டாம் மனைவி மஞ்சுளாவிற்கு துரோகம் செய்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

400 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் விஜயகுமார் தமிழில் மட்டுமல்லாமல் சில இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். பல வகையான கதாபாத்திரத்தில் நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். நாட்டாமை, முதல்வன், சாமி, சிங்கம், சந்திரமுகி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது தந்தை கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவர் 2015ம் ஆண்டுவரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார்.

விஜயகுமார் பேத்தி திருமணம்:

விஜயகுமாருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள் முதல் மனைவி முத்துகண்ணு, இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளா. முத்துகண்ணுவின் மகள்கள் அனிதா மற்றும் கவிதா மகன் நடிகர் அருண் விஜய் ஆவர். மஞ்சுளாவிற்கு மூன்று மகள்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி. இதில் அனிதா மற்றும் கவிதா இருவரும் மருத்துவர்கள். இந்நிலையில் அனிதாவின் மகள் தியாவிற்கு சென்ற 19ம் தேதி மஹாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. தியா மற்றும் அவரது கணவருமே மருத்துவர் என்பது குறிப்பிடதக்கது.

அருண் விஜய் இயற்கை, முத்தம், தவம், வேதா, தடையறத் தாக்க போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அருண் விஜய் தன் தந்தை விஜயகுமாருடன் இணைந்து பாண்டவர் பூமி, மாஞ்சா வேலு, குற்றம் 23 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக லைகா தயாரிப்பில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் மிஷன் சேப்டர் 1 படம் பொங்கலுக்கு திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படம் மே மாதம் கோடை விடுமுறையில் ரீலிஸாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பயில்வான் ரங்கநாதன் குற்றச்சாட்டு:

பயிலவான் ரங்கநாதன் விஜயகுமாரை பற்றி வீடியோ ஒன்றில் பேசுகையில், எம்ஜிஆரின் ரசிகராக விஜயகுமார் மாங்குடி மைனர் படத்தில் நடித்துள்ளார். எம்ஜிஆருடன் எகப்பட்ட படங்கள் நடித்த மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். மஞ்சுளா படத்தில் நடித்து பல சொத்துகளை சேர்த்து வைத்திருந்தார். மேலும், அதிமுகவில் இணைந்து அந்த கட்சியின் கொடியை கையில் பச்சைக் குத்திக்கொண்டார். சேர்ந்த சில நாட்களில் கட்சியின் விதிமுறைகளை மீறியதாக கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.

விஜயகுமார் தன் முதல் மனைவி முத்துகண்ணுவின் இரண்டு மகள்களை மட்டும் மருத்துவப் படிப்பு படிக்க வைத்து. இரண்டாம் மனைவி மஞ்சுளாவின் மூன்று மகள்களையும் மருத்துவப் படிப்பு படிக்க வைக்காமல் நடிக்க வைத்துள்ளார் . இது அவர் மஞ்சுளாவிற்கு செய்த துரோகம் இல்லையா. அவர் ஒரு கண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்துக்கொண்டவர்” என்று கூறியுள்ளார்.

படிக்கிற புள்ளைங்க தான படிக்கும். மேலும், நடிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் நடிகைகளாக மாறுவதில் என்ன தவறு என நெட்டிசன்கள் பயில்வானை விளாசி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...