தேவதையே சேலையில்.. ஷாக்சியின் அசத்தல் புகைப்படம்!!

தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ஷாக்சிக்கு ஜாக்பாட் அடித்ததுபோல் இருந்தது பிக் பாஸ் 3 வாய்ப்பு. இவர் அடையாளம் தெரியாத ஒரு கதாபாத்திரத்தில் ராஜா ராணி படத்திலும், காலா படத்திலும் நடித்திருந்தார்.

ஆனால் இவரைப் பெரிதாக யாரும் அடையாளம் காணவில்லை. ஷெரின் மற்றும் அபிராமியுடன் துவக்கத்தில் நட்பு கொண்டிருந்த இவர் கவின் காதல் விவகாரத்தால் அபிராமியிடம் மனக் கசப்பு ஏற்பட்டுப் பிரிந்தார்.

கவினால் ஏமாற்றப்பட்ட இவரை, லாஸ்லியாவும் புரிந்துகொள்ளாமல் செயல்பட மனம் நொந்து போனார். ஆனால் இவருக்கு ரசிகர்கள் போதிய ஆதரவு அளித்தனர்.

095210816384a20860f89e060382a282-1

அதன்பின்னர் வெளியே வந்த அவர் விஸ்வாசம் மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் படங்களிலும் நடித்துள்ளார். அடுத்து, ராய் லட்சுமி நடித்து வரும் சின்ட்ரெல்லா படத்திலும் நடித்து வருகிறார்.

ஊரடங்கால் சினிமாப் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில் ஷாக்சி அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். உடற்பயிற்சி செய்யும் வீடியோ, சமையல் என அசத்திவரும் ஷாக்சி ஏஞ்சல்போல் ஒரு புகைப்படத்தினைப் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள், “ரொம்ப அழகா ஆயிட்டீங்க, தேவதையே சேலையில் இருப்பதுபோல் உள்ளது” என்று கூறி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...