இளையராஜா பின்னணி இசை செய்ய மறுத்த ரஜினி படம்.. ஏவிஎம் செய்த புத்திசாலித்தனமான செயல்..!

ரஜினிகாந்த் நடிப்பில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ஒரு திரைப்படத்திற்கு ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு மட்டும் பின்னணி இசை அமைக்க இளையராஜா மறுத்துவிட்டதாகவும் அதன் பின்னர் வேறு காட்சிகளுக்கு கம்போஸ் செய்த பின்னணி இசையை அந்த காட்சிக்கு போட்டு படத்தை ரிலீஸ் செய்ததாகவும் கூறப்படுவதுண்டு. அந்த படம்தான் ‘முரட்டுக்காளை’.

ஏவிஎம் நிறுவனம் முதல் முறையாக ரஜினியை வைத்து ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து உருவான படம் தான் ‘முரட்டுக்காளை’. இந்த படம் மிகப்பெரிய கமர்சியல் ஹிட்டானது. ரஜினியை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது.

கமல், ரஜினி நடிக்க வேண்டிய படம்.. இலவசமாக இசையமைத்த இளையராஜா.. பன்னீர் புஷ்பங்கள் படத்தின் சொல்லப்படாத கதை..!

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாச்சலம் கதை, வசனத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் கதைப்படி ஹீரோ நான்கு தம்பிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த ஊரில் உள்ள பண்ணையாரின் தங்கை அவரை காதலிப்பார். ஆனால் அந்த பெண் தன்னுடைய தம்பிகளையும் தன்னையும் பிரித்து விடுவார் என்று அச்சப்பட்டு அவரை திருமணம் செய்ய மறுத்து விடுவார்.

அதன் பிறகு பண்ணையாரால் கொடுமைப்படுத்தப்பட்ட ஒரு பெண் தப்பித்து வரும் நிலையில் அவரை ஹீரோ திருமணம் செய்து கொள்வார். அதன்பின் பண்ணையாருக்கும் ஹீரோவுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் மீதிக்கதை.

கிட்டத்தட்ட பல படங்களில் வந்த இந்த கதையை பஞ்சு அருணாச்சலம் சற்று வித்தியாசமான திரைக்கதை எழுதி படத்தை மெருகேற்றி இருப்பார். அதனால்தான் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க பல பிரபலங்கள் பரிசீலனை செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் விஜயகாந்த். ஆனால் விஜயகாந்த் தான் வில்லனாக நடிக்க முடியாது என்று மறுத்து விட்ட பிறகு ஜெய்சங்கர் இந்த படத்திற்கு வந்தார். அதுவரை ஜெய்சங்கரும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் ஏவிஎம் நிறுவனத்திற்காகவும் எஸ்.பி.முத்துராமன் அவர்களுக்காகவும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டார்.

சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?

இந்த படத்தில் சுருளிராஜன் காமெடி நடிகராக நடித்தாலும் அவருக்கு ஒரு பிளாஷ்பேக் வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கும். வில்லன் கூடவே இருந்து அவருக்கு கொம்பு செவி அதன் பிறகு வில்லனையை அழிக்க முயற்சிக்கும் ஒரு கேரக்டரில் சுருளிராஜன் நடித்தார்.

இந்த படத்தின் பாடல்கள் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட். குறிப்பாக ஆரம்பகாட்சியிலே வரும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘எந்த பூவிலும் வாசம் உண்டு’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாகின.

இந்த படத்தின் இன்னொரு சிறப்புமிக்க அம்சம் என்னவென்றால் ரயில் சண்டை காட்சிதான். ஜூடோரத்தினம் இந்த சண்டைக் காட்சியை வித்தியாசமாக எடுத்திருப்பார். இந்த சண்டைக்காட்சி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ரயில்வே துறையில் சிறப்பு அனுமதி பெற்று இந்த காட்சி படமாக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் ரயில் சண்டை காட்சிக்கு பின்னணி இசையமைக்க முடியாது என்று இளையராஜா சொல்லிவிட்டாராம். அதற்கு என்ன காரணம் என்பதையும் அவர் சொல்லவில்லை. இதனையடுத்து அவர் வேறு சில காட்சிகளுக்காக அமைத்த பின்னணி இசையை ரயில் சண்டை காட்சிகளுக்கு பொருத்தி படத்தை ரிலீஸ் செய்ததாகவும் கூறப்பட்டது.

20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!

1980ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி ரிலீசான இந்த படம் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. கிட்டத்தட்ட 100 திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் இந்த படம் ஓடி மிகப் பெரிய வெற்றி பெற்றது.

Published by
Bala S

Recent Posts