மிசாவில் ஒரு பால்காரர் கைது என்று கூட செய்தி வெளியாகியுள்ளது.. ஆனால் ஸ்டாலின் மிசாவில் கைது என ஒரு செய்தி கூட செய்தித்தாளில் இல்லை.. ஒரு முதலமைச்சரின் மகன் மிசாவில் கைது என்பது பேப்பரில் வராமல் எப்படி இருக்கும்? 50 வருஷமா ஏமாத்திட்டீங்க.. இனிமேலும் ஏமாத்த முடியாது.. எங்க ஆளுங்க தோண்டி துருவி உண்மையை வெளியே கொண்டு வந்துருவாங்க.. செப்டம்பர் 10, 2026, 17:32
ஸ்டாலினை தேர்தலின்போது கடுமையாக விமர்சித்ததால் தேர்தலுக்கு பின் அவரிடம் நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார்.. இது ஒரு கண்ணியமான நிலைப்பாடு.. தேர்தல் சண்டை தேர்தலோடு முடிந்துவிட்டது என்று அர்த்தம்.. செப்டம்பர் 10, 2026, 16:59
மிசா காலத்தில் நடந்தது என்ன? உண்மையாகவே மிசாவில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா? தோண்டி எடுக்கும் நெட்டிசன்கள்.. ஒரு ஆவணம் கூட மிசாவில் கைதானதாக உறுதி செய்யவில்லை.. கருணாநிதியின் மற்ற மகன்கள் கைதாகவில்லை.. கருணாநிதியே மிசாவில் கைதாகவில்லை.. ஆனால் ஸ்டாலின் மட்டும் கைது ஏன்? அவங்க எல்லாம் மிசாவை எதிர்க்கவில்லையா? பல விடை தெரியாத கேள்விகள்.. செப்டம்பர் 10, 2026, 16:30
ஒரு கட்சி கூட கூட்டணி இல்லாமல் 35% ஓட்டு வாங்கி ஆளும் கட்சியான தவெகவுக்கு இப்போது விசிக, காங்கிரஸ், முஸ்லீம் லீக், இடதுசாரிகள், மதிமுக இருக்கிறது.. கிட்டத்தட்ட 50% ஓட்டு வங்கி இருக்கிறது..கூட்டணியே இல்லாமல் போட்டியிடும் திமுக கனவில் கூட ஜெயிக்க முடியாது.. 3வது இடம் அல்லது டெபாசிட் காலிக்கு கூட வாய்ப்புள்ளது. செப்டம்பர் 10, 2026, 16:00
சென்னை சென்ட்ரல் ஜெயில்ல இருந்த பைல காணோம்.. கோயம்புத்தூரில் இருந்த பைல செல்லரிச்சுடிச்சு, பாளையங்கோட்டையில் இருந்த பைல் தானே புயல்ல காணாம போயிடுச்சு! என்னங்கய்யா ரீல் சுத்துறீங்க.. ஒரு பொய்யை 100 வருஷம் பொத்தி பொத்தி பாதுகாத்து வச்சாலும், அது என்னைக்காவது ஒரு நாள் விஸ்வரூபமா வெளியே வரும் செப்டம்பர் 10, 2026, 12:30
திமுக வட்டாரம் விஜயை விமர்சிக்க பயன்படுத்திய வார்த்தைகள்: தற்குறி கூத்தாடி சைக்கோ நார்சிசிஸ்ட் பொட்டு மாமா கொலைகாரன் ரீல்ஸ் முதலமைச்சர் டம்மி சிஎம் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சிக்க பயன்படுத்திய வார்த்தை: “ஸ்டாலின் அங்கிள், ஸ்டாலின் சார்.. இதில் இருந்தே யார் நாகரீக அரசியல்வாதின்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க… செப்டம்பர் 10, 2026, 12:01
சட்டசபை உலகம் முழுவதும் லைவ்ல்ல போயிகிட்டு இருக்குது, பின்ன எதுக்கு ஒரு திமுக அமைச்சர் சட்டப்பையில் மொபைல் கேமிராவுல வீடியோ எடுத்து அனுப்பனும்.. இதில் இருந்து தெரிகிறதா அவர்களது புத்திசாலித்தனம்? விசுவாசத்தனத்தை காண்பிக்கிறது தப்பில்லை.. அதுக்குன்னு இப்படியா கோமாளித்தனம் பண்ணனும். செப்டம்பர் 10, 2026, 10:59
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு முதல்வர் விஜய் ஒரே ஒருமுறை பிரச்சாரம் சென்றால் போதும், நிச்சயம் வெற்றி தான்.. விஜய் ஆட்சிக்கு எதிரான மனநிலை சுத்தமாக இல்லை என்பதால் விசில் வின் பண்ணுவது உறுதி.. செப்டம்பர் 10, 2026, 10:39
எம்ஜிஆர் – கருணாநிதி காலத்தில் இருந்தே அதிமுக – திமுக மறைமுக டீலிங் இருந்ததாம்.. அதனால் இரு தரப்பிலும் செய்த ஊழல்கள் பெரிதாக வெளியே வரவே இல்லை.. கருணாநிதி – ஜெயலலிதா, ஜெயலலிதா – ஸ்டாலின், எடப்பாடியார் – ஸ்டாலின், ஸ்டாலின் – எடப்பாடி என தொடர்ச்சியாக நல்ல அண்டர்ஸ்டாண்டிங்.. முதல்முறையாக அண்டர்ஸ்டாண்டிங் இல்லாத தவெக செப்டம்பர் 10, 2026, 08:15
சட்டசபையில இப்படியா அசிங்கப்பட்டு வருவீங்க? மூத்த திமுக எம்.எல்.ஏக்களை வச்சு செஞ்சாரா ஸ்டாலின்? என்னை அசிங்கப்படுத்தும்போதும், எங்க அப்பாவை அசிங்கப்படுத்தும்போது வேடிக்கை பார்க்கவா சட்டசபைக்கு போனீங்க? செப்டம்பர் 10, 2026, 07:59
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு.. விசிலுக்கு தான் ஓட்டு என 60% மக்கள் கருத்து.. போன தடவை தெரியாமல் அதிமுகவுக்கு போட்டுட்டோம்.. விஜய் அண்ணாவுக்காக யாரை நிப்பாட்டினாலும் தவெகவுக்கு போடுவோம்.. அடித்து சொல்லும் வாக்காளர்கள்.. செப்டம்பர் 10, 2026, 07:44
ரத்தீஷை ஓட விட முடிவு செய்த முதலமைச்சர் விஜய்? மக்கள் காசை கொள்ளையடிச்சிட்டு துபாய்ல்ல போய் ஒளிஞ்சிகிட்டா விட்டுருவோமா? உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும் தேடி வந்து தூக்கிட்டு வருவோம்.. அதிகாரிகளை முடுக்கிவிட்டாரா முதல்வர் விஜய்? ரத்தீஷ் ஒரு ஆளை பிடிச்சா போதும், ஒட்டுமொத்த சீட்டுக்கட்டு கோபுரமும் சரிஞ்சிடும்.. செப்டம்பர் 9, 2026, 21:00