Entertainment
அத்திவரதரை வழிபட்ட லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா, செளந்தர்யா
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. விடுமுறை நாட்களில் காஞ்சிபுரமே திணறுகிறது அந்த அளவு மக்கள் கூட்டம் வருகிறது.

தினமும் பல விஐபிக்களும் அத்திவரதரை தரிசிக்க வருகின்றனர் அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த், தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யாவுடனும் குழந்தைகளுடனும் சென்று தரிசித்தார்.
உடன் குடும்பத்தினர் சிலரும் சென்றிருந்தனர். ரஜினிகாந்த்தோ , நடிகர் தனுஷோ அத்திவரதரை பார்க்க வரவில்லை. வந்தாலும் பக்தர்களுக்கு இடையில் மாட்டிக்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
