விஜய்க்கு போட்டியாக ஷாருக்கானை களமிறக்கும் அட்லி! ஒரு பாடலுக்கு மட்டும் இத்தனை கோடியா?

தென்னிந்திய சினிமா ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த உலக ரசிகர்களும் எதிர்பார்த்து இருக்கும் படம் தான் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம். அட்லி இயக்கத்தில் பல வருடங்களாக தயாராகி வரும் இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி போன்ற பல தென்னிந்திய பிரபலங்களும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகி இணையதளத்தில் தாறுமாறாக வைரலானது. அதை அடுத்து சென்னையில் 5 நாட்கள் தொடர்ந்து ஜவான் பட பாடல் ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்களில் பாடலுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் படத்திற்கு அதுதான் ஒரு முக்கியமான ப்ரொமோஷனாகவும் பார்க்கப்படுகிறது. இதற்கு சான்றாக தளபதி விஜய் அவர்களுடைய நடிப்பில் உருவாகும் லியோ படத்தில் 2000 நடன கலைஞர்களை வைத்து ஒரு பாடல் எடுக்கப்பட்டிருக்கிறது. அதுதான் நான் ரெடி பாடல் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதற்கு போட்டியாக சூர்யா நடிக்கும் கங்குவா படத்திலும் 1500 நடன கலைஞர்களை வைத்து ஒரு பாடல் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜவான் படத்திலும் ஒரு பாடலுக்கு 15 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.அட்லி 1000க்கு அதிகமான பெண்களை வைத்து ஜிந்தா பந்தா பாடலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாடலுக்கு சோஃபி நடன ஆசிரியராக உள்ளார்.

விஜய்யின் திடீர் வெளிநாட்டுப்பயணம்… உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

இதற்காக ஐதராபாத்,பெங்களூர்,மதுரை மற்றும் மும்பையில் இருந்து 1000 நடன கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த பாடலுக்கு ஷாருக்கான் தாறுமாறாக நடனமாடி உள்ளதாகவும் தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பாட்டுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார், மேலும் ஜவான் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் சீக்கிரம் பாடல் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகவும் அந்த பாடல் தான் ஜிந்தா பந்தா பாடல் என ரசிகர்கள் எல்லாம் பயங்கரமாக ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...