பையா-2வில் ஹீரோவாக நடிக்கபோகும் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ்!! தளபதியின் சொந்தக்காரர்!!

பையா 2010ல் வெளியான சூப்பர் ஹிட் படங்களுள் ஒன்று. பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் என முரட்டு தோற்றம் கொண்ட ஹீரோவாக நடித்து வந்த கார்த்தியை சாக்லேட் பாயாகவும் அதே சமயம் ஆக்‌ஷன் ஹீரோவாகவும் காட்டிய படம் பையா.

கார்த்தி, தமன்னா இருவரது கேரியரிலும் முக்கிய படமாக அமைந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அந்த வருடத்தில் எங்கு திரும்பினாலும் , அந்த பையா படத்தின் பாடல்களே ஒலித்து கொண்டிருக்கும்.

அப்படி ஒரு மாஸ் வெற்றியடைந்த படம். ரோட் ட்ரிப் லவ் ஸ்டோரி தமிழுக்கு புதுசு அதை அறிமுகப்படுத்தியது லிங்குசாமிதான். அறிமுகம் இல்லாத இருவர் ஒரே காரில் பயணிக்கின்றனர். பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார்கள். அவர்களுக்குள் காதல் எப்படி பிறந்த என்பதே கதை. இதில் ஜெகன் வரும் காட்சிகள் காமெடியாக இருக்கும்.

இப்படி எல்லா அம்சமும் கொண்ட படம் பையா. 13 வருடங்களுக்கு பிறகு, பையா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார் லிங்குசாமி. கார்த்தியே இந்த படத்திலும் ஹீரோவாக நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் லிங்குசாமி, கார்த்தி மற்றும் ஆர்யாவை பையா-2 வில் நடிக்க வைக்கலாம் என்று நினைத்திருக்கிறார்.

கார்த்தி, ஆர்யாவை பையா-2 விற்காக லிங்குசாமி அணுகிய போது, அவர்கள் நடிக்க மறுத்து விட்டார்களாம். அதனால் வேறு யாரை நடிக்க வைக்கலாம் என முயற்சித்த போது அதர்வா முரளியின் சகோதரர் ஆகாஷை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் லிங்குசாமி. ஆகாஷ் முரளி ஏற்கனவே விஷ்ணுவர்தனின் இயக்கத்தில், பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார் அதுவே அவரது முதல் படம். அந்த படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கிறார்.

விஷ்ணுவர்தனின் படம் முடிந்த பின் பையா-2 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. சாக்லேட் பாயாக இருக்கும் ஆகாஷ் முரளி இந்த படத்திற்கு ஏற்ற ஹீரோவாக தான் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பையா-2 ஹீரோயின் யாராக இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், தளபதி விஜய்யின் உறவினரான பிரிட்டோ சேவியரின் மகளைதான் ஆகாஷ் முரளி திருமணம் செய்திருக்கிறார்.

பெரும்பாலும், ஹீரோவாக அறிமுகம் ஆன பின்தான் நடிகர்கள் திருமணம் செய்வார்கள். ஆனால், ஆகாஷ் திருமணம் ஆன பின்பே ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். மாதவன் போன்ற ஒரு சில ஹீரோக்கள் தான் திருமணத்திற்கு பிறகு ஹீரோவாக அறிமுகம் ஆகி டாப் ஹீரோவாக இருந்திருக்கிறார்கள். ஆகாஷ் அந்த வரிசையில் இடம் பிடிப்பாரா? என்று பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.