இந்தியா இல்லாமல் போட்டி இல்லை.. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இடமாற்றம்?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாது என பிசிசிஐ தெரிவித்ததை அடுத்து அந்த போட்டி தொடரை வேறு நாட்டுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

50 ஓவர்கள் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்காது என இந்திய கிரிக்கெட் சங்க தலைவர் தெரிவித்துள்ளதை அடுத்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிர்ச்சி அடைந்துள்ளது.

asian cup 2 இந்தியா இல்லாமல் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தினால் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என்பதை புரிந்து கொண்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தானிலிருந்து வேறு நாட்டிற்கு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டமிட்டு வருகிறது. அனேகமாக வங்கதேசம் அல்லது இலங்கையில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் ரமேஷ் ராஜா நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது இந்தியாவின் அழுத்தம் காரணமாக 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானிலிருந்து வேறு நாட்டிற்கு மாற்றப்பட்டதாகவும் அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டால் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என்றும் தெரிவித்தார்.

asian cup 1அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பாகிஸ்தான் பங்கேற்காது என அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றது என்றும் அதன்பிறகு 14 ஆண்டுகளாக பாகிஸ்தானில் நடைபெறும் எந்த போட்டியிலும் இந்தியா கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...