உதவியாளரை ஓங்கி அறைந்து வேலையிலிருந்து தூக்கிய எம்.ஜி.ஆர்., கடுங்கோபத்துக்கு காரணம் இதுவா?

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., திரைத்துறையில் இருந்தபோதும் சரி, அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்த போதும் சரி தன்மேல் எந்த ஒரு குற்றமும் குறையும் வராமல் பார்த்துக் கொள்வதில் கண்டிப்பாக இருப்பார். மக்கள் பணியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட எம்.ஜி.ஆர் மீது ஒரு புகார் சுமத்தப்பட்டது. அன்றைய தினம் அது சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதியின் காதுகளுக்குச் செல்ல அந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

பாடகர் டிஎம்எஸ் வாழ்வில் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நடிகர் திலகம்… எப்படின்னு தெரியுமா?

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது தினமும் தன்னுடைய தோட்டத்து வீட்டில் இருந்து கோட்டைக்குச் செல்வது வழக்கம். அப்போது அவரைக் காண அவரது வீட்டின் முன் ரசிகர்களும், பொதுமக்களும் மனுக்களுடன் காத்துக் கொண்டிருப்பர். அப்படி ஒருநாள் எம்.ஜி.ஆர் மக்களிடம் குறைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் திடீரென எம்.ஜி.ஆர் கலில் வந்து விழுந்தார்.

உடனே பதற்றமடைந்த உதவியாளர்கள் அவரைத் தூக்கி வெளியே அனுப்ப முயற்சி செய்தனர். அப்போது எம்.ஜி.ஆர் உதவியாளர்களிடம் அவரை விட்டுவிடுமாறு கூறிவிட்டு, அவரிடம் என்ன விஷயம் என்று கேட்டிருக்கிறார்.

அப்போது அந்த நபர், “நான் ஈரோட்டைச் சார்ந்தவன். உங்களின் உதவியாளர் ஒருவர் என ஒரு நபரைச் சுட்டிக் காட்டி இவர் என்னிடம் 45 ஆயிரம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டார்” என்று மனக்கவலையுடன் கூற, அதனை எம்.ஜி.ஆரால் நம்ப முடியவில்லை. யார் என்று எம்.ஜி.ஆர் மறுபடியும் வினவ, இவர்தான் என்று கையைக் காட்டி இன்ஜினியரிங் காலேஜ்ல சீட் வாங்கித் தருகிறேன் என்று கூறி என்னிடம் 45 ஆயிரம் ரூபாய் வாங்கி ஏமாற்றி விட்டார்” என்று கூறினார்.

தன்மீது எந்தக் கறையும் வராமல் மெனக்கெட்ட எம்.ஜி.ஆருக்கு தன் உதவியாளரே இப்படி மோசடியைச் செய்தது கண்டு பொங்கி எழுந்தார். கோபத்தில் கண்கள் சிவந்தன. அப்போது அந்த உதவியாளரைப் பார்த்து எம்.ஜி.ஆர்., “பார்.. உன்னால எனக்கு எவ்ளோ கெட் பேருன்னு.. ஏன் இப்படி செஞ்சே.. நீ பண்ண காரியத்தால என்கிட்ட வந்து கேட்குறான்” என்று அவரை அறைந்து விட்டு உடனே வேலையை விட்டு நீக்கினார்.

புகார் தெரிவித்தவரிடம் உங்க அட்ரஸை கொடுத்துட்டுப் போங்க என்று கூறி அனுப்பி வைத்தார். அப்போது சட்டப்பேரவை நடந்தது. இந்த விஷயம் எப்படியோ எதிர்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியின் காதுகளுக்குச் செல்ல சட்டப்பேரவையில் எம்.ஜி.ஆரைப் பார்த்து முதல்வரின் உதவியாளர் 45 ஆயிரம் ரூபாய் வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டாராமே என்று கேட்க, எம்.ஜி.ஆர். அதற்கு,“ஆம். நடந்தது உண்மைதான். பாதிக்கப்பட்டவருக்கு பணம் கொடுத்தாகிவிட்டது. ஏமாற்றிய அந்த உதவியாளரையும் பணியிலிருந்து நீக்கி விட்டோம்” என்று பதில் கொடுத்திருக்கிறார்.

இவ்வாறு தனது ஆட்சியின் மேல் வைக்கப்பட்ட குற்றச் சாட்டிற்கு அதை ஏற்றுக் கொண்டு பக்குவமாய் கையாண்டு எதிர்கட்சியினரின் நன்மதிப்பையும் பெற்றார் எம்.ஜி.ஆர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...