அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள லேபில் வெப்சீரிஸ்.. இதுவரை எப்படி இருக்கு?

லாக்டவுன் சமயத்தில் இந்தியாவின் ஓடிடி பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகளவில் அதிகரித்தது. சினிமாவை தாண்டி வெப்சீரிஸ் பக்கம் ரசிகர்கள் தங்கள் பார்வையை திருப்பினர்.

லாக்டவுன் முடிந்து மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ஓடிடி தொழிலை பல முன்னணி நிறுவனங்கள் நாடு முழுவதும் விரிவுப்படுத்தி வருகிறது.

அமேசான் பிரைம், நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், சோனி லைவ், g5, ஆஹா, ஜியோ சினிமா என அதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சினிமாவுக்கு நிகராக வெப் சீரிஸ் களும் தமிழிலும் உருவாகி வருகின்றன.

லேபில் வெப்சீரிஸ் விமர்சனம்:

சுழல், விலங்கு, நவம்பர் ஸ்டோரி, பேப்பர் ராக்கெட் உள்ளிட்ட பல வெப் சீரிஸ்கள் ஹிட் அடித்த நிலையில், அந்த வரிசையில் தற்போது அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய், தான்யா ஹோப், மாஸ்டர் மகேந்திரன், சரண்ராஜ், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள லேபில் வெப் சீரிஸ் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புது எபிசோட் களுடன் வெளியாகி வருகிறது.

இதுவரை ஐந்து எபிசோடுகள் வெளியாகி உள்ள நிலையில், அது தொடர்பான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படம் உள்ளிட்ட பல படங்கள் வடசென்னை மக்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டிய நிலையில், அவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள வெப் சீரிஸ் தான் எந்த லேபில்.

வாலி நகர் என்னும் இடத்தில் இளைஞர்கள் ரவுடிகளாக உருவாவதாகவும், அவர்களை திசை திருப்ப ஹீரோ ஜெய் தனியாக போராடுவது போல இந்த வெப் சீரிஸை அருண் ராஜா காமராஜ் உருவாக்கியுள்ளார்.

வடசென்னையில் வாழ்ந்தால் ரவுடியாக தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்றும் அங்கேயும் படித்து நீதிபதி ஆகி காட்டுகிறேன், என்னைப் போல மற்ற இளைஞர்களையும் வழிநடத்தப் போகிறேன் என்கிற முடிவுடன் போராடி வரும் நடிகர் ஜெய் தனது லட்சியத்தில் சாதித்தார் இல்லையா என்பதை சுவாரஸ்யமாக இதுவரை கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.

இளைஞர்களான மாஸ்டர் மகேந்திரன் மற்றும் அவரது நண்பர் ரவுடியாக லேபிளில் இடம் பிடிக்க வேண்டும் என போராடி வருகின்றனர். அவர்களை கொலை வழக்கில் காப்பாற்றும் ஜெய்க்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளும், ஜெய் நீதிபதியாக விடக்கூடாது என எனக்கு பிரச்சனைகளும் தான் லேபில் வெப்சீரிஸின் கதையாக உள்ளது.

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த பணியை கச்சிதமாக எதார்த்தத்திற்கு பஞ்சமின்றி நடித்துள்ளனர். வெப் சீரிஸ் என்றாலும் சினிமா போன்ற மேக்கிங்கை கொடுத்து அருண் ராஜா காமராஜ் தனது முத்திரையை பதித்துள்ளார். நீதிபதியாக மாறுவதற்கு கொலை செய்ய சதி திட்டம் தீட்டி விட்டார் என்கிற குற்றச்சாட்டுடன் அவரை போலீஸ் அழைத்து செல்லும் விதமாக ஐந்தாவது எபிசோடு நிறைவடைந்துள்ளது. அடுத்த வாரம் என்ன நடக்கும் என்கிற ஆவலுடன் ரசிகர்கள் அடுத்த எபிசோடை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் வெளியான திரைப்படங்கள் எதுவும் திருப்தி அளிக்கவில்லை என்றால் தாராளமாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த வெப் சீரிஸை கண்டு ரசிக்கலாம். ஆபாச வசனங்கள் இடம் பெறுவதால் குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்ப்பது நலம்.

லேபில் – ஜெய்க்கு ஜெயம்

ரேட்டிங் – 3.75/5.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.