அரைகுறையா தெரிஞ்சுகிட்டு எதையும் பேசாதீங்க.. SK பற்றி எனக்குத் தெரியும். – அருண்ராஜா காமராஜ்

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் சிவகார்த்திகேயன் பற்றி கூறிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. தமிழ்த் திரையுலகில் சமீபத்திய படங்கள் மூலம் கவனிக்க வைத்தவர் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்த அருண்ராஜா காமராஜ் சிவகார்த்திகேயன் மூலம்  தமிழ்சினிமாவின் உச்சத்தில் சென்றார். சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படம் மூலம் இயக்குநராக உருவெடுத்து பின்னர் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தையும் இயக்கினார்.

Arunraja Label

தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் லேபிள் என்ற வெப்சீரிஸை இயக்கியுள்ளார். ஜெய், ஹரீஷ், மாஸ்டர் மகேந்திரன் எனப் பலர் நடித்துள்ள இந்த வெப்சீரிஸ் இளைஞர்களின் மோதலை குறிக்கும் படமாக அமைந்துள்ளது. இதில் ஜெய் வழக்கறிஞர் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

இத்திரைப்படத்திற்கான பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அருண்ராஜா காமராஜ், “ஊருல யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், யார் எப்படி என்பது தெரியும், அரைகுறையாக தெரிந்து கொண்டு எதையும் பேசக் கூடாது. சிவகார்த்திகேயனைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் எனவே அந்த விமர்சனங்கள் தேவையற்றது” என்ற பதில் அளித்துள்ளார்.

இன்றும் அதே எனர்ஜியுடன் நடனத்தில் மிரளவைக்கும் பிரபுதேவா : இப்படித்தான் Diet Follow பண்றாரா?

அண்மையில் இசையமைப்பாளர் இமான் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் இழைத்து விட்டார் எனவும், இனி அவர் நடிக்கும் படங்களுக்கு இசையமைக்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பு இதற்கு எவ்வித விளக்கமும் கொடுக்காத நிலையில் சோசியல் மீடியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்வில் இந்த விமர்சனம் அவர்மீது கரும்புள்ளியை ஏற்படுத்த அதற்கு விடையளிக்கும் விதமாக அருண்ராஜா காமராஜ் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அருண்ராஜா காமராஜ் இயக்குநர் அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தில் காமெடி நடிகராக சந்தானத்துடன் வலம் வருவார். பின்னர் சிவகார்த்திகேயன் நட்பு கிடைக்க அவரின் திறமைய அங்கீகரித்து கனா படம் இயக்கும் வாய்ப்பை வழங்கினார் எஸ்.கே. தற்போது ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலும் அருண்ராஜா காமராஜ் எழுதியது நினைவிருக்கலாம். மேலும் கபாலி படத்தின் நெருப்புடா பாடல் உள்ளிட்ட பல பாடல்களையும், பின்னணி பாடகராகவும் இயங்கி வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...