இன்றும் அதே எனர்ஜியுடன் நடனத்தில் மிரளவைக்கும் பிரபுதேவா : இப்படித்தான் Diet Follow பண்றாரா?

90’s ஹீரோக்கள் எல்லாம் அப்பா, அண்ணன், குணச்சித்திர வேடங்கள் என்று அடுத்த ரவுண்டில் வலம் வந்துகொண்டிருக்க நடனப்புயல் பிரபுதேவா இன்னும் அதே இளமைத் துள்ளல் நடனத்துடன் இந்திய சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கிறார். நடனம், நடிப்பு,  இயக்கம் என படு பிஸியாக இருந்தாலும் தன்னுடைய உடலைப் பேணுவதில் மிகுந்த அக்கறை காட்டிவருகிறார்.

என்றும் அதே இளமையாக தோற்றமளிக்கும் தளபதி விஜய்யும் தன்னுடைய உடலைப் பேணுவதில் மிகுந்த அக்கறை காட்டிவர அந்த வரிசையில் பிரபுதேவாவும் இணைந்துள்ளார். இன்றும் அதே தாடியுடன் ஒல்லியான உடல்வாகுடன் இவர் இருப்பது இவர் காலத்து மற்ற ஹீரோக்களை பொறாமைப் படச் செய்துள்ளது. எப்படி இவர் மட்டும் இவ்வளவு Fit ஆக இருக்கிறார் என்று முணுமுணுத்து வருகின்றனர். 50 வயதைக் கடந்த பிரபுதேவா தன்னுடைய Fitness மற்றும் Food Diet ரகசியத்தை தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது, ’‘சின்ன வயதில் இருக்கும் போது நான் பெரிய சாப்பாட்டு பிரியர். தினமும் 12 இட்லி, தோசை, பூரி என வெளுத்துக் கட்டியதாகவும் தற்போது அவ்வப்போது Diet Menu மாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து 3 நாட்களுக்கு Diet உணவும் அதற்கடுத்த நாள் நன்றாக சாப்பிடுவதாகவும், காலையில் ஓட்ஸ் இடையில் ஏதேனும் ஒரு பழச்சாறு மற்றும் மதியம் சிறிதளவு மாப்பிள்ளை சம்பா அல்லது குதிரைவாலி அரிசி சாதம் அதன்பின் இரவு 7மணிக்கு 2 இட்லி மட்டுமே தன்னுடைய உணவுப் பட்டியல் என தெரிவித்துள்ளார்.

ஆபிஸ் பாய் டூ மக்கள் நாயகனான ராமராஜன்… ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த ஹீரோ

இந்த மாதிரி உணவுப்பட்டியல் கடைப்பிடிப்பதன் மூலமாக மட்டுமே தான் இன்னும் Fitness ஆக இருப்பதாகவும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார். இவர் காலத்து ஹீரோக்கள் தங்களுடைய நடன அசைவுகளை காலத்திற்கேற்றாற் போல் மாற்றிக் கொள்ள ஆனால் பிரபுதேவா தற்போது காலத்து ஹீரோக்களையும் தனது நடன அசைவுகளால் மிரள வைக்கிறார்.

இவரின் நடன திறமையை கவுரவிப்பதற்காகவே இவருக்கு பத்மஸ்ரீ முதல் தேசிய விருதுகள் வரை பிரபுதேவாவை அலங்கரித்தது. ஒவ்வொரு நடனத்திலும் சிறு சிறு காமெடிகள் செய்து ரசிகர்களை வச்ச கண் வாங்காமல் ரசிக்க வைப்பவர் பிரபுதேவா என்றால் அது மிகையாகாது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews