குக் வித் கோமாளி சீசன் ஐந்தின் போட்டியாளர்கள் இவர்களா… அடேங்கப்பா… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…

விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் புகழ் பெற்றது குக் வித் கோமாளி என்ற நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சி. நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்த குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனிற்கு தயாராகி கொண்டிருக்கிறது.

எல்லா சீசனிலும் நடுவர்களாக செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு இருந்தனர். இந்த வருடம் குக் வித் கோமாளியின் அடுத்த சீசனை தொடங்குவதற்கு விஜய் டிவி சற்று தாமதம் செய்து கொண்டிருந்தது. இதற்கிடையில் செஃப் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதைப் பற்றி மறைமுகமாக பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது மிகவும் வைரல் ஆனது.

இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் ஆரம்பமாக உள்ள நிலையில் தற்போது அதன் ப்ரோமோ வெளியாகி இருந்தது. அதில் செஃப் தாமு அவர்களும், சமீப காலமாக இணையத்தில் பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களும் கைக் கோர்த்து வருவது போல் அந்த ப்ரோமோவில் உள்ளது. செஃப் வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியான நிலையில் இந்த சீசனில் செஃப் தாமுவையும் மாதம்பட்டி ரங்கராஜையும் நடுவர்கள் ஆக்கி உள்ளது விஜய் டிவி நிறுவனம்.

இது ஒருபுறம் இருக்க, இவர்கள் தான் இந்த சீசனின் போட்டியாளர்கள் என்ற சில தகவல்கள் கசிந்து வருகிறது. அதில் பிரபல யூ டியூபர் மற்றும் புட் ரெவியூவர் ஆன இர்பான் இந்த சீசனில் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது.

மேலும் நடிகர் விடிவி கணேஷ் மற்றும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோரும் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். கூடவே இளம் ஹீரோயின்கள் இல்லாமல் எப்படி, அதற்காக நடிகை திவ்யா துரைசாமி உடன் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.