அரைஞாண் கயிறு பழமையின் அடையாளமா?!



நம் தாத்தா, அப்பாலாம் கறுப்பு, சிவப்பிலான கயிறு ஒன்றினை கட்டி இருப்பாங்க. சிலர் வெள்ளியில் கட்டி இருப்பாங்க. அதுக்கு அரைஞாண் கயிறு என பெயர். ஞாண் என்றால் தொங்குதல் என்று பொருள். அரை என்பதற்கு இடுப்பு, அரை உடல் என்ற பொருளும் இருக்கிறது. இதனால்தான் அதற்கு அரைஞாண் கயிறு என பெயர் வந்தது. இந்த காலத்தில் சிறிய வயதில் இப்படி அணிந்திருப்பதோடு சரி. வளர்ந்தபின் அசிங்கம் என கழட்டி வீசிடுறாங்க. ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டி இருப்பது மிக அவசியம்.

பெண்கள் காலில் கொலுசு அணிவது, மெட்டி அணிவது போன்றவற்றிக்கு பின்பு எப்படி அறிவியல் ஒளிந்துள்ளதோ அதுபோலதான் ஆண்கள் அரைஞாண் கயிறு அணிவதற்கு பின்பும் அறிவியல் ஒளிந்துள்ளது.

பொதுவாக பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு குடல் இறக்க நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனை ஆங்கிலத்தில் ஹெர்ணியா என்று அழைப்பர். ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவதன் மூலம் இந்த நோயை வராமல் தடுக்க முடியும்.  உடல் எடை அதிகரிப்பதனாலும் ஆண்களுக்கு இந்த குடல் இறக்க நோய் ஏற்படும் என்று கூறப்படுகிறது. முன்காலத்தில் உடல் எடை கணக்கிடவும் இந்த கயிறு கட்டப்பட்டது. முன்பெல்லாம் எடைப்பார்க்கும் வசதிகள் இல்லை. குறிப்பிட்ட தளர்வில் இந்த அரைஞாண் கயிறு இடுப்பில் கட்டப்படும். கயிற்றின் தளர்வு அதிகரித்தால் உடல் எடை குறைந்ததாகவும், கயிற்றின் இறுக்கம் அதிகரித்தால் உடல் எடை கூடியதெனவும் கணக்கிட்டு அதற்கேத்தவாறு உடல் எடையின்மீது கவனம் செலுத்துவர்.

நம் முன்னோர்கள் செய்த எல்லா செயலிலும் எதாவது ஒரு அறிவியல் காரணம் உண்டு. அதனால் பழமை என எதையும் தள்ளாது பின்பற்றுவோம்.

Published by
Staff

Recent Posts