மலையாள சினிமா பக்கம் திரும்பிய அனுஷ்கா… காரணம் இதுதான்…

ஸ்வீட்டி ஷெட்டி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை அனுஷ்கா ஷெட்டி அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவர். கர்நாடகாவின் மங்களூரில் பிறந்த இவர் தெலுங்கு சினிமாவின் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார்.

தெலுங்கு தமிழ் மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா முதல் முறையாக மலையாள சினிமாவில் அறிமுகமாக உள்ளார். 2005 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமான நடிகை அனுஷ்கா, சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே முன்னணி நடிகர்களான நாகர்ஜுனா, சிரஞ்சீவி, பிரபாஸ் ஆகியோருடன் இணைந்து நடித்து பிரபலமானவர். அதிலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘அருந்ததி’ திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அதன் பின்பு தமிழில் நடிகர் விஜயுடன் இணைந்து ‘வேட்டைக்காரன்’, நடிகர் சூர்யாவுடன் ‘சிங்கம் 1,2,3, பாகங்கள்’, நடிகர் ஆர்யாவுடன் ‘இரண்டாம் உலகம்’, சீயான் விக்ரமுடன் ‘தெய்வத்திருமகள்’ ஆகிய படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த படங்கள் அனைத்தும் வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றன. அதற்குப் பின் நடிகர் பிரபாஸுடன் இணைத்து நடித்த ‘பாகுபலி’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று இவரை முன்னணி நடிகையாக மாற்றியது. பாகுபலி படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட மகாராணியின் கதாபாத்திரமும், தோற்றமும் இவருக்கே உரித்தானது போல் பொருந்தின. பிரபாஸ் – அனுஷ்கா ஜோடிப் பொருத்தம் ராஜா ராணியாக இப்படத்தில் வருவது அவ்வளவு ரசிக்கக் கூடியதாக இருந்தது.

அடுத்ததாக, நடிகர் ஆர்யாவுடன் ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அந்த படத்திற்காக உடல் எடையை கூட்டினார். அனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு அப்படம் பேசப்படவில்லை. அதற்குப் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் திணறினார். அதன் பின்பு இவர் நடிப்பில் வெளியான ‘நிசப்தம்’, ‘பாகமதி’ எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனது உடல் எடையை குறைத்ததுடன் கடந்த ஆண்டு வெளியான மிஸ்டர் அண்ட் மிஸ்டேர்ஸ் போலிஷெட்டி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல விமர்சங்களைப் பெற்றது. ஆனாலும் வசூலில் பின்தங்கி இருந்தது. அதற்குப் பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் படவாய்ப்பு இல்லாத காரணத்தால் தற்போது நடிகை அனுஷ்கா ஆறு மாத இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் ரோஜின் தாமஸ் இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார் நடிகை அனுஷ்கா. இப்படத்திற்கு ‘காத்தனார்- தி- வொயில்ட் சார்சார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கதையின் நாயகனாக ஜெயசூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் மிகவும் ஸ்லிம்மான தோற்றத்தில் கடற்கரையோரம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.