செய்திகள்

பிடிஆர் பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட 2வது ஆடியோ: இன்னும் எத்தனை ஆடியோ இருக்குது?

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் முதலமைச்சர் குடும்பம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியிட்டார். இந்த ஆடியோ வைரலான நிலையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆடியோவுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிடிஆர் குறித்த இரண்டாவது ஆடியோவை வெளியிட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டாவது ஆடியோவில் ’ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கையை நான் அரசியலுக்கு வந்த முதல் நாள் முதல் ஆதரவளித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான், அந்த கட்சியில் கட்சித் தலைவர் ஒருவராகவும் பிரதமர் ஒருவராகவும் இருக்கின்றனர். கட்சியையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பு பிரிந்து இருக்க வேண்டும் என்பதுதான் சரியானது

ஆனால் இங்கு எல்லாம் முடிவுகளையும் எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் தான் எடுக்கின்றனர். நிதி மேலாண்மை செய்வது சுலபம், இது ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அத்தனையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். முதல்வரின் மகனும் மருமகனும் தான் கட்சியே. அவர்களை நிதி மேலாண்மை செய்ய சொல்லுங்கள்? அதனால் 8 மாதங்கள் பார்த்த பிறகு முடிவு செய்துவிட்டேன், இது ஒரு நிலையான முறை கிடையாது, எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால் இப்போது நான் விலகினால், இந்த குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால், அவர்கள் செய்தது அனைத்தும் எதிர்வினையாக அவர்களுக்கே திரும்பிச் செல்லும். எப்படி சொல்வது நான் இந்த யுத்தத்தை மிக சீக்கிரமாக கைவிட்டதாக எனது மனசாட்சி சொல்லாது என கருதுகிறேன்’ என்று பிடிஆர் பேசியதாக அண்ணாமலை வெளியிட்டுள்ள ஆடியோவில் உள்ளது.

ஏற்கனவே முதல் வீடியோவில் தமிழக முதலமைச்சரின் மகனும் மருமகனும் சேர்ந்து 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கூறப்பட்டிருந்தது என்பது தெரிந்தது.

 

Published by
Bala S

Recent Posts