அச்சு அசல் த்ரிஷா போலவே இருக்காங்களே!.. பிரபல தொகுப்பாளினியின் வைரலாகும் நீச்சல் குள புகைப்படம்!

சன் மியூசிக் விஜேவான அஞ்சனா ரங்கன் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அவரை பார்க்கும் போது குருவி படத்தில் த்ரிஷா நீச்சல் குளத்தில் குளிப்பது போலவே உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மிஸ் சின்னத்திரை என்னும் தொலைக்காட்சி போட்டியில் தனது நடிப்பை முதல் முறையாக வெளிப்படுத்தினார். அந்த போட்டியில் வேற்றியும் அடைந்தார். மேலும் தொலைக்காட்சி தொகுப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கினார். நம்ம ஸ்டார், நட்சத்திர ஜன்னல், பாக்ஸ் ஆபிஸ், ஃபிரியா விடு, வாழ்த்துக்கள் போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

404263533 18398747044010780 772357263227753389 n

விஜே அஞ்சனா ரங்கன்:

இதயம் அன்பும் நன்றியுணர்வும் நிறைந்தது, ஆனால் நான் இனி சன் மியூசிக்கில் இருக்கப் போவதில்லை எனவும் தனிப்பட்ட இடைவேளைக்காக நான் வெளியே வந்துள்ளேன் எனவும் பதிவிட்டிருந்தார். 10 வருட காதல், ஒற்றுமை, மகிழ்ச்சி, சண்டைகள், உயர்வு, தாழ்வு என எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. இவ்வளவு அன்பையும் ஆதரவையும் எனக்கு தந்த உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் கூறினார்.

மேலும், கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமண செய்து கொண்டார். இந்த க்யூட்டான நட்சத்திர தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. குடும்பதிற்க்காக சில ஆண்டுகள் ஒய்வெடுத்த அஞ்சனா ரங்கன் கம்பேக் கொடுக்கும் வகையில் ஜுனியர் சூப்பர் ஸ்டார், ஞாயிறு கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

அல்லு அர்ஜுன் கோபம்:

அல்லு அர்ஜுன் ‘புஷ்பா’ பட புரமோஷனில் விஜே அஞ்சனா கேட்ட கேள்வியால் தான் மேடையிலிருந்து கிழே இறங்கி சென்றார் என வதந்திகள் வெளியாகி இருந்தது. சென்னையில் நடைபெற்ற ‘புஷ்பா’ பட புரமோஷன் விழாவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அஞ்சனா ரங்கன் , அல்லு அர்ஜுனை ‘புஷ்பா’ பட பாடலிற்க்கு நடனமாட சொன்னதாகவும் ஆனால் அல்லு அர்ஜுன் அவரது கையை தட்டிவிட்டு கோபமாக மேடையை விட்டு இறங்கினார் என்றும் இணையதளத்தில் செய்திகள் பரவின.

இந்நிலையில் அது குறித்து விளக்கமளித்த அஞ்சனா ரங்கன் அந்த நிகழ்ச்சிக்காக கொடுக்கப்பட்டிருந்த நேரம் எப்போதோ முடிந்துவிட்டது பிறகு அவரை இரண்டு ஸ்டெப் மட்டும் ரசிகர்களுக்காக ஆட கேட்டோம். ஆனால் நேரமில்லாததால் அவர் அதனை மறுத்துவிட்டார். இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் விளக்கமளித்துள்ளார்.

த்ரிஷா மாதிரியே இருக்கீங்க:

இன்ஸ்டாகிராமில் டிடி நீலகண்டன், அஞ்சனா ரங்கன் உள்ளிட்ட தொகுப்பாளினிகளுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளன. சுமார் 14 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து வரும் நிலையில், தற்போது அஞ்சனா ரங்கன் தான் நீச்சல் குளத்தில் ரசித்து குளிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதை பார்க்கும் போது அப்படியே த்ரிஷா மாதிரியே இருக்கீங்களே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.