காதலர் தினத்துக்கு அனிருத் கொடுத்த சூப்பர் கிஃப்ட்.. எல்ஐசி படத்தின் பாடல் கிளிம்ப்ஸ் வெளியானது!..

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் எல்ஐசி திரைப்படத்தின் முதல் பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று இரவு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடி தான் படத்திற்கு அனிருத் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து அசத்தினார். அந்த படத்திலிருந்து தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து தனுஷ் எந்த கூட்டம் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன் அந்தப் படத்திற்கும் அனிருத் இசையமைத்திருந்தார். சொடக்கு மேல சொடக்கு உள்ளிட்ட பல பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தன.

காதலர் தினத்துக்கு அனிருத் கிஃப்ட்:

கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கிய காதலும் கடந்து போகும் படத்திற்கு மீண்டும் சூப்பர் ஹிட் ஆல்பத்தை அனிருத் கொடுத்து அசத்தினார். இந்நிலையில் அடுத்து பிரதீப் பிரகலநாதனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்ஐசி படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர்.

காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று பல பாடல்கள் வெளியாகி வந்த நிலையில், கடைசி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக ‘தீமா’ என்னும் பாடலின் ட்ரிங்ஸ் வீடியோவை அனிருத் இசையமைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த பாடல் நிச்சயம் இளைஞர்கள் மத்தியில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்னேஷ் சிவனின் எல்ஐசி:

ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படம் வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் முடிவை கையில் எடுத்திருக்கும் பிரதீப் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார்.

ஏகே 62 படத்தை இயக்கவிருந்த விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து அஜித் அவரை அதிரடியாக நீக்கிய நிலையில், தற்போது எல்ஐசி படத்தை விடாமுயற்சி படத்திற்கு முன்னதாக ரிலீஸ் செய்ய தீவிரமாக உழைத்து வருகிறார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் இயற்கை விவசாயி ஆர்வலராக நடித்து வருகிறார். அதற்காக வித்தியாசமாக தாடியை எல்லாம் வைத்துக் கொண்டு சீமான் புதிய தோற்றத்தில் சூப்பராக உள்ளார்.

காதலர் தினத்தை தனது மனைவி நயன்தாரா மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகத்துடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். தனது காதலுக்கு 10 வயது என்றும் விக்னேஷ் சிவன் க்யூட்டாக போஸ்ட் போட்டிருந்தார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.