Animal Review: ரன்பீர் கபூரின் மிரட்டலான நடிப்பு!.. சந்தீப் ரெட்டி வங்காவின் துணிச்சலான இயக்கம்.. ஆனால்? அனிமல் விமர்சனம்!..

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள அனிமல் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் இன்று வெளியானது.

அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. பிரம்மாஸ்திரம் படத்தில் கடவுள் அவதாரம், சக்தி என பிரம்மாண்டத்தை காட்டிய ரன்பீர் கபூர் தனக்குள் இருக்கும் பீஸ்ட்டை அன்லீஷ் செய்துள்ளார்.

அனிமல் விமர்சனம்:

ரன்பீர் கபூருக்கு பக்காவான ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கெமிஸ்ட்ரியில் சும்மா புகுந்து விளையாடி ரொமான்ஸில் தீப்பிடிக்க வைத்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா வரும் காட்சிகள் எல்லாமே இளைஞர்களுக்கான ட்ரீட் என்று தான் சொல்ல வேண்டும். ஏகப்பட்ட உதட்டு முத்தக் காட்சியில் எந்தவொரு கூச்சமும் இல்லாமல் நடித்து இருக்கிறார். அதிலும், ஒரு காட்சியில் ரன்பீர் கபூர் குடித்த தண்ணீரை அவரது வாய் வைத்து குடிப்பது என எல்லை மீறி நடித்து இளைஞர்களை சூடேற்றி உள்ளார்.

அனிமல் கதை என்னவென்று பார்த்தால் பல்வீர் சிங்காக அனில் கபூர் நடித்துள்ளார். அவரது மகனாக தனக்குள் ஒரு மிருகத்தை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் ரன்பீர் கபூர். ஒரு கட்டத்தில் அந்த மிருகத்தை அவர் கட்டவிழ்த்து விட பின்னர் என்ன ஆகிறது என்பது தான் அனிமல் படத்தின் கதை.

அப்பாவையும் அவரது சாம்ராஜ்யத்தையும் மகனாக காப்பாற்ற வேண்டியது தனது கடமை என்பதால் தந்தையை கொல்லத் துடிக்கும் எதிரியை அடித்து துரத்த களமிறங்கும் ரன்பீர் கபூர், அதில் ஜெயித்தாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை. ஆனால், இந்த கதையை வைத்துக் கொண்டு 3 மணி நேரம் 21 நிமிடங்கள் ரசிகர்கள் சும்மா வச்சு செய்யலாமா பாஸ்? என்பது போலத்தான் கேட்கத் தூண்டுகிறது.

அது தெரிந்து தான் ரசிகர்கள் தியேட்டருக்கு செல்கின்றனர். ஆனால், அந்தளவுக்கு நீளம் இருந்தால், அது மொத்தமும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் அர்ஜுன் ரெட்டி பட  இயக்குநர் ஏமாற்ற மாட்டார் என ரன்பீர் கபூர் உயிரை கொடுத்து நடித்ததை போலவே ரசிகர்களும் பணத்தை கொடுத்து பார்க்க வருகின்றனர். ஆனால், இரண்டாம் பாதியில் படம் படுத்தே விடுவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான். இந்த படம் முழுவதுமே ரன்பீர் கபூரின் கதாபாத்திர உருவாக்கம் தான் என லியோ போலவே கதை சொல்கின்றனர். இரண்டாம் பாகம் வேறு இருக்கும் என போஸ்ட் கிரெடிட் காட்சிகள் எல்லாம் வைத்து ஹைப்பை கிளப்ப முயன்றாலும் ரன்பீர் கபூரின் வெறித்தனமான நடிப்பை தாண்டி படத்தில் பெரிதாக எதுவும் ஈர்க்காதது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான்.

அனிமல் – அவ்ளோ சூப்பரா இல்லை!

ரேட்டிங்: 3/5.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...