ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படியொரு அவஸ்த்தயை அனுபவித்தாரா கண்ணகி பட நடிகை!

கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள கண்ணகி திரைப்படம் நாளை வெளியாகிறது. அந்த படத்தில் அம்மு அபிராமி நடித்த கிளைமேக்ஸ் காட்சி நேற்று வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், தற்போது அம்மு அபிராமி கொடுத்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. ராட்சசன் படத்தில் சிறுமியாக நடித்து பிரபலமானவர் அம்மு அபிராமி. அதற்கு முன்பே விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படத்தில் தான் கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

கண்ணகி படத்தில் அம்மு அபிராமி

அதன் பின்னர் என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம் என பல படங்களில் நடித்த அம்மு அபிராமிக்கு 2018ல் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் தான் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.

அந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த அசுரன் படத்தில் தனுஷின் காதலியாக நடித்திருப்பார் அம்மு அபிராமி. பர்ஃபார்மன்ஸ் பண்ணக் கிடைத்த வாய்ப்பை பக்காவாக பயன்படுத்தி நடித்த அவருக்கு பாராட்டுக்கள் மற்றும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

பாத்ரூம் போக கஷ்டப்பட்ட அம்மு அபிராமி

23 வயதாகும் அம்மு அபிராமி இந்த ஆண்டு பிளாக்‌ஷீப் டீம் உருவாக்கிய பாபா பிளாக்‌ஷீப் படத்தில் நடித்து ரசிகர்களை நோக அடித்து இருந்தார். இந்நிலையில், அடுத்ததாக டிசம்பர் 15ம் தேதி அவரது நடிப்பில் கண்ணகி படம் வெளியாகிறது.

கண்ணகி படத்தை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் பல யூடியூப் சேனல்களுக்கு அந்த படத்தில் நடித்த கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் பேட்டி அளித்து வருகின்றனர். இந்நிலையில், அம்மு அபிராமி அளித்த ஒரு பேட்டியில் தயாரிப்பாளரை தாளித்து எடுத்துள்ளார்.

அம்மு அபிராமி அதிகளவில் பெரிய நடிகர்கள் படங்களிலேயே நடித்து வந்த நிலையில், சில படங்கள் மட்டும் குறைவான பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார். சரியான பாத்ரூம் வசதி கூட நடிகைகளுக்கு அமைத்துத் தராமல் தயாரிப்பாளர்கள் அப்படி செலவை மிச்சப்படுத்தி படம் எடுத்து என்ன பண்ணப் போறாங்க என கேள்வி எழுப்பி உள்ளார்.

கண்ட கண்ட இடங்களில் பாத்ரூமுக்கு போய் தனக்கு நோய் தொற்று ஏற்பட்டு ரொம்பவே அவஸ்த்தை பட்டு இருக்கேன். எல்லா பெண்களுக்கும் முதலில் பாதுகாப்பான பாத்ரூம் வசதியை செய்துக் கொடுத்து விட்டு படத்தை எடுக்க வாங்க என தயாரிப்பாளர்களுக்கு தேவையான கோரிக்கையை வைத்து இருக்கிறார் அம்மு அபிராமி.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.