அட்ராசக்க!.. அம்மாவாகப்போகும் அமலா பால்!.. ஒண்ணும் ஒண்ணும் மூன்று என சூப்பர் கணக்கு போட்டு கலக்கிட்டரே!..

நடிகை அமலா பால் அம்மாவாகப் போவதாக தற்போது சமூக வலைதளத்தில் அதிரடியாக அறிவித்துள்ளார். சிந்து சமவெளி படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் அமலா பால். அந்த படத்தில் மாமனார் மற்றும் அமலா பாலுக்கு இடையே நடக்கும் மோசமான உறவு குறித்த காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பின.

அதன் பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் அமலா பாலுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அதையே தனது முதல் படமாக நினைத்துக் கொண்டு அதன் பின்னர் தொடர்ந்து தெய்வத் திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களை பண்ண ஆரம்பித்தார்.

அமலா பால் கர்ப்பம்:

இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அமலா பால் தொடர்ந்து நடித்து வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார். வாய்ப்பு வழங்கி வந்த இயக்குனருடன் காதல் ஏற்பட அவருடன் வாழ்க்கையும் நடத்தலாம் என 2014ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் அமலா பால்.

2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துக் கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் குழந்தையை பெற்றுக் கொள்ள எந்தவொரு பிளானும் செய்யவில்லை.

தொடர்ந்து தனுஷின் வேலையில்லா பட்டதாரி, விஐபி 2, ராட்சசன் என பல படங்களில் நடித்து பிசியான நடிகையாக மாறினார் அமலா பால். ஆனால், ஆடை  படத்திற்கு பிறகு எழுந்த சர்ச்சை மற்றும் அமலா பால் – தனுஷ் தொடர்பு என கிளம்பிய வதந்திகள் காரணமாக விவாகரத்து பஞ்சாயத்து வெடித்து அமலா பால் மற்றும் ஏ.எல். விஜய் தம்பதியினர் பிரிந்தனர்.

2வது திருமணத்தில் செம ஹேப்பி:

அதன் பின்னர் வட இந்தியர் ஒருவரை அமலா பால் திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் திருமணக் கோலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகின. ஆனால், திருமணம் ஆகவில்லை என்றும் போட்டோக்களை வெளியிட்ட அந்த நபர் மீது மோசடி புகார் அளித்து சர்ச்சையை கிளப்பினார் அமலா பால்.

சினிமா வாய்ப்புகள் இழந்த நிலையில், தற்போது ஜகத் தேசாய் என்பவரை கடந்த நவம்பர் 5ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார் அமலா பால். இந்நிலையில், தற்போது தான் கர்ப்பமாக உள்ள சந்தோஷ செய்தியை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களுடன் அறிவித்து ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார்.

வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து வந்த அமலா பால் விரைவில் அம்மாவாக போகும் நிலையில், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒன்றும் ஒன்றும் மூன்றாகும் அதிசயத்தை இன்று தான் உணர்ந்தேன் என பதிவிட்டு இருக்கிறார் அமலா பால்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.