அஜித்தின் விடாமுயற்சி படத்தின் கதை இதுதானா? பிரபல திரை விமர்சகர் வெளியிட்ட அப்டேட்!

நடிகர் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது விடா முயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். லைக்கா தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடந்து முடிந்தது. இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகி பல நாட்கள் எந்த அப்டேட்களும் இல்லாத நிலையில் கடந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னையில் சிறிது நாட்கள் ஓய்வெடுத்த படக்குழு தற்பொழுது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் அஜித் மற்றும் திரிஷா ஒரே விமானத்தில் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 70 நாட்கள் நடக்க இருப்பதாகவும், அதில் நடிகர் அஜித் மற்றும் நடிகை திரிஷா, நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் ஆரவ், ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படப்பிடிப்பில் நடிகர் அர்ஜுன் மற்றும் அஜித்திற்கு இடையேயான சண்டைக் காட்சிகள் படமாக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் தற்பொழுது விடா முயற்சி படத்தின் கதை குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் தல அஜித் மற்றும் திரிஷா கணவன் மனைவியாக நடிக்க உள்ளனர். இவர்கள் இணைந்து ஒரு வெளியூர் பயணம் செய்யும்பொழுது நடிகர் திரிஷா தான் இருக்கும் இடத்திலிருந்து தொலைந்து எதிரி கும்பல் இடம் மாட்டிக் கொள்கிறார். தனது விடாமுயற்சியால் நடிகர் அஜித் தனியாக போராடி தன் மனைவி திரிஷாவை எப்படி மீட்டு எடுக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என பிரபல திரை விமர்சகர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கேமியாவாக நடிக்க ஒப்புக்கொண்டு ஹீரோவாக நடித்த ரஜினி! 25 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு!

இந்த படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி நடிகர் அஜித்திடம் முதலில் கூறிய கதை இது அல்ல என்றும் இந்த கதை ஒரு ஹாலிவுட் படத்தின் ஒரு காட்சியை மையமாக வைத்து உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. முதலில் மகிழ்திருமேனி கூறிய கதை நடிகர் அஜித்திற்கு திருப்தி அளிக்காத பட்சத்தில் மாறுதலாக வெளிநாட்டு படம் ஒன்றின் கதையை மகிழ் திருமேனி இரண்டாவது முறை கூற அதற்கு அஜித் சம்மதிக்க விடாமுயற்சி படம் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க இருப்பதால் ஒரு அஜித்தின் கதை இதுவாகவும் மற்றொரு அஜித்தின் கதை வேறொன்றாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிகை திரிஷா முன்னணி கதாநாயகியாக இருக்கும் பட்சத்தில், அத்துடன் படத்தில் நடிகை ரெஜினா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருப்பது படத்தின் மற்றொரு கதையின் குறிப்பிடும் விதத்தில் அமைந்துள்ளது. விடாமுயற்சி படத்தின் கதை குறித்து பல தகவல்கள் வெளியே வந்தாலும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் முற்றிலும் மாறுபட்டதாக அமையும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விடாமுயற்சியின் படப்பிடிப்புகள் இன்னும் இரண்டு மாதங்களில் முடிய உள்ளதாகவும் அதைத்தொடர்ந்து அஜித்தின் பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி இந்த படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.