அஜித்தின் ஏகே 65 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? கிடைத்த பிரம்மாண்ட அப்டேட்

அல்டிமேட் ஸ்டார், தல என தென்னிந்திய ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் அஜித் குமார். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் ஹீரோவான அஜித் தற்போது தமிழில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களுக்கு இணையாக குடும்ப வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் அஜித் அடிக்கடி பைக் டூர், பைக் ரேஸ் என உலக சுற்றுலா மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே கொடுத்து வந்த அஜித் தற்பொழுது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவது அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் பொங்கலை முன்னிட்டு அஜித் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் வெளியாகி 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு இரண்டு மூன்று மாதங்கள் கழித்து வெளியாகின. அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த நவம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐரோப்பிய நாடான அஜர்பைஜானில் தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 70 நாட்கள் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பிப்ரவரி மாதங்களில் முடிவடையும் என்றும் இந்த படம் அடுத்த வருடம் மே மாதம் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாக இருப்பதாகவும், இந்த படத்தை தெலுங்கு பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம் மைத்திரி தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்க இருப்பதாகவும் மே மாதம் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்தடுத்த படம் குறித்த அப்டேட்கள் வெளிவர துவங்கியுள்ளது.

மக்களின் அன்பும், பாசமும் போதும்… இந்த விருது எல்லாம் எனக்கு வேண்டாம்.. கிடைத்த விருதை திருப்பி அனுப்பிய எம்ஜிஆர்!

இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் 64வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த அப்டேட்களை விட அஜித்தின் 65 ஆவது திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய பிரம்மாண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அஜித்தின் 65 ஆவது திரைப்படத்தை கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களின் முன் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் சலாம் திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை அடுத்து ஜூனியர் என் டி ஆர் இன் 31 வது திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதை அடுத்து பிரசாந்த் நீல் இயக்க இருக்கும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. கே ஜி எஃப், சலார் 2 என அடுத்தடுத்து படங்கள் வரிசையில் இருந்தாலும் நடிகர் கமலஹாசனுடன் இணைந்து படம் இயக்க போவதாக சில நாட்களின் முன் தகவல் வெளியாக இருந்தது. இந்த நிலையில் நடிகர் அஜித்துடன் இணைய இயக்குனர் பிரசாந்த் நீல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித்துடன் இணைந்து ஏகே 65 வது திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கினால் இந்த திரைப்படம் ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளின் சாதனைகளை இந்த கூட்டணி முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.