பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கிய அஜித்தின் 63 வது திரைப்படம்! மாஸ் அப்டேட் இதோ!

அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாகி பட்டையை கிளப்பியது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான துணிவு திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருந்தது. அதை அடுத்து நடிகர் அஜித் தனது 62 ஆவது திரைப்படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் அறிவிப்புகள் பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. அதன் பின் கடந்த நவம்பர் மாதம் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. ஐரோப்பிய நாடான அஜர்பைஜானில் முதற்கட்ட படப்பிடிப்புகள் நடந்த நிலையில் அடுத்தடுத்த படப்பிடிப்புகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்து திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், ஆர்வ், ரெஜினா, ப்ரியா பவானி சங்கர் என பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

விடாமுயற்சி திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் மீதியுள்ள படப்பிடிப்பும் விரைவாக நடத்த படக்குழு முடிவெடுத்துள்ளது. இந்த படத்திற்காக அஜித் பிப்ரவரி மாதம் வரை கால்ஷீட் கொடுத்த காரணத்தினால் அஜித்தின் காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆக்சன் திரைப்படம் ஆக உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிகர் அர்ஜுன் ரேசிங் காட்சிகளில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மிக ஸ்டைலான சண்டைக் காட்சிகளுடன் தயாராகி வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் என எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகாத நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படம் அஜித்தின் பிறந்தநாள் ஆன மே ஒன்றாம் தேதி வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 63வது திரைப்படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைய உள்ளார். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு ஆதிக்கிற்கு கிடைத்துள்ளது. மேலும் அஜித் ஆதிக் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தை தெலுங்கு பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆக்ஷன் படங்களில் மட்டும் கலக்கி வந்த தல அஜித் தனது 63வது திரைப்படத்தில் தனது வழக்கமான ஸ்டைலை மாற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அதிரடி சண்டை காட்சிகள் இல்லாமல் காமெடி கதைக்களத்தை மையமாக வைத்து அஜித்தின் 63வது திரைப்படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக அஜித்160 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. தற்போது இந்த படத்தின் பிரீ ப்ரெட்க்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அஜித்தின் 63 வது திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அஜித் நடித்துவரும் விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட் இதுவரை வெளியாகாத நிலையில் அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படத்தின் அப்டேட் கிடைத்துள்ளதால் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வியந்து பாராட்டிய முன்னணி பிரபல நடிகை! வாய்ப்புக்காக காத்திருந்த ஹீரோக்கள்!

மேலும் இந்த பூஜையில் நடிகர் அஜித் கலந்து கொண்டுள்ளாரா என்பது குறித்த விவரம் தெரியவில்லை. படக் குழுவினருடன் மிக எளிமையான முறையில் இந்த பூஜை நடத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் துவங்கும் எனவும் அதை அடுத்து தொடர்ச்சியாக படப்பிடிப்புகள் நடத்தப்படும் எனவும் ஹாலிவுட் தகவல் வட்டாரங்களில் தகவல்கள் கிடைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.