ரீ-ரிலீஸ்-ல் கில்லிக்கு போட்டியாக வரப்போகும் அஜீத் படம்.. தல பிறந்தநாளில் காத்திருக்கும் தரமான சம்பவம்

தமிழ் சினிமாவுக்கு சரியான கதைப் பஞ்சம் போல. 20 வருடங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆகி மாஸ் ஹிட்டான அல்லது தரமான கதைக்களம் இருந்தும் அந்த சமயத்தில் சரியாகப் போகாத படங்கள் அனைத்தும் ரீ-ரிலீஸ் ஆகி புதுப்படங்களைப் போலவே வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் கில்லி. கடந்த 2004-ல் வெளியான கில்லி படம் தற்போது நேற்று முன் தினம் ரீ-ரிலிஸ் ஆகி தளபதி விஜய் படம் புதிதாக வந்தால் எப்படி ஒரு கொண்டாட்டம் இருக்குமோ அதேபோல் ஒரு எனர்ஜி Feel-ஐ கொண்டு வந்திருக்கிறது.

பழைய எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களான நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, சிவந்த மண், ராஜராஜ சோழன், திருவிளையாடல், வசந்த மாளிகை போன்ற படங்களே ரீ-ரிலீஸ் ஆகியது. இந்தப் படங்களை மீண்டும் டிஜிட்டல் முறையில் உயர்தரத்தில் மெருகேற்றி ரிலீஸ் செய்தனர். இதனால் 50 வயதைக் கடந்த சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்தப் படங்கள் மீண்டும் ஹிட் ஆகியது.

இதே வரிசையில் அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினி, கமல் படங்கள் முறையே படையப்பா, பாபா, முத்து, ஆளவந்தான், விருமாண்டி போன்ற படங்கள் அனைத்தும் ரி-ரீலீஸ் வரிசையில் இணைந்தன. இப்படி இரண்டு தலைமுறை நடிகர்களைத் தாண்டி தற்போது விஜய், அஜீத் படங்களும் இந்த வரிசையில் இணைந்துள்ளன.

திடீரென ஓடிப்போன பூமிகா.. ‘ஆப்பிள் பெண்ணே..’ பாட்டுக்குப் பின்னால இப்படி ஒரு கதையா?

பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான கில்லி தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது. விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில் அஜீத் ரசிகர்கள் மட்டும் சும்மா விடுவார்களா? அஜீத்தின் எந்தப் படத்தினை ரீ-ரீலிஸ் செய்யலாம் என்று ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து அவருக்கு பிறந்த நாள் பரிசாக மே1-ல் அஜீத்தின் பிளாக் பஸ்டர் படமான மங்காத்தாவை ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இதற்கான புக்கிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி முன்னணி நடிகர்களின் படங்கள் மீண்டும் ரீ-ரீலீஸ் ஆகி புதுமுக நடிகர்களின் படங்களையும், புதுப் படங்களையும் மீண்டும் மண்ணைக் கவ்வ வைக்கின்றன. மேலும் இந்தப் படங்களை திரையரங்குகளில் பார்த்து ரசிக்காத 2K கிட்ஸ்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

Published by
John

Recent Posts