திடீரென ஓடிப்போன பூமிகா.. ‘ஆப்பிள் பெண்ணே..’ பாட்டுக்குப் பின்னால இப்படி ஒரு கதையா?

தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோக்களுக்கு ஓப்பனிங் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகி அவர்கள் சினிமாவில் நிலையான ஒரு இடத்தைத் தக்க வைக்க ஆணிவேராக அந்தப் படங்கள் இருந்துள்ளன. கார்த்திக்கு பருத்தி வீரன், ஜெயம் ரவிக்கு ஜெயம், மாதவனுக்கு அலைபாயுதே, தனுஷ்-க்கு துள்ளுவதோ இளமை, சிவகார்த்திகேயனுக்கு மெரீனா போன்ற பல ஹீரோக்களை உதாராணமாகச் சொல்லலாம். அந்த வகையில் தனது முதல் படத்தையே சூப்பர் ஹிட்டாக்கி, ப்ரஷ்ஷான இளமையுடன், அழகான கதைக்களத்துடன் அமைத்து தமிழ்சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த்.

கடந்த 2002-ல் வெளியான ரோஜாக் கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீகாந்த் முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தார். ரசிகர்கள் என்பதைக் காட்டிலும் ரசிகைகளை அதிகம் கவர்ந்தார் என்றே சொல்லாம். மென்மையான காதல் கதைகளைச் சொல்வதில் கைதேர்ந்த இயக்குநரான சசி இந்தப் படத்திலும் அதே பாணியைக் கையாண்டு வெற்றியைக் கொடுத்தார். ஸ்ரீ காந்துடன் பூமிகா, ராதிகா, ரகுவரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்திருந்தனர். பரத்வாஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

‘த’ கர வரிசையில் எழுதப்பட்ட செய்யுள்… கண்ணதாசன் செய்த மேஜிக்-ஆல் சூப்பர் ஹிட் பாடலான அதிசயம்!

குறிப்பாக இந்தப் படத்தில் வரும் ஆப்பிள் பெண்ணே நீ யாரே.., மொட்டுகளே மொட்டுகளே.., போன்ற பாடல்கள் இன்றளவும் டிரெண்டிங்-ல் இருக்கும் மெலடி பாடல்களாக மனதை வருடுகின்றன. இதில் ஆப்பிள் பெண்ணே நீ யாரோ.. பாடலுக்குப் பின் ஒரு சுவராஸ்ய தகவல் ஒன்று புதைந்துள்ளது.

அதன்படி பனி மலையில் மொத்த பட யூனிட்டே செல்ல திடீரென பூமிகா பின்வாங்கியுள்ளார். படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே தனது பயணத்தை இரத்து செய்து விட்டார். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. பாதி பாடல் ஷுட்டிங் முடிந்த நிலையில் மீதி பாதி பாடலுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் படக்குழு யோசித்துக் கொண்டிருந்தது.

பின்னர் வேறுவழியின்றி ஸ்ரீகாந்தை மட்டும் வைத்து பாடலைப் பதிவு செய்யலாம் என முடிவெடுத்து அவரை மட்டும் வைத்து ஷோலோவாக மீதிப் பாடலை எடுத்திருக்கின்றனர். இதனால் இந்தப் பாடலில் முதலில் பூமிகா வருவது போலவும் பின் பாதி பூமிகா இல்லாமலும் இருக்கும்.

இந்தப் பாடல் பரத்வாஜின் ஆஸ்தான பாடகரான ஸ்ரீனிவாஸ் பாடியிருப்பார். இந்தப் பாடல் பனிமலைகளுக்கிடையில் மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கும். மேலும் பாடலும் சூப்பர் ஹிட் ஆனது. இப்படி ஆப்பிள் பெண்ணே.. பாடல் ஷுட்டிங்கை திடீரென பூமிகா புறக்கணித்ததாக பேட்டி ஒன்றில் ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...