அஜித் பட வில்லன் நடிகர் மரணம்.. மாரடைப்பால் வந்த வினை.. கதறி அழும் குடும்பம்

நடிகர் அஜித் குமார் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான துணிவு படத்தில் வில்லனாக நடித்திருந்த ரித்துராஜ் சிங்கின் மறைவு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை தொடர்ந்து பல பாலிவுட் பிரபலங்கள் சமூக வலைதளத்தில் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரித்துராஜ் சிங் தொலைகாட்சியில் ஜீ சேனலில் ஒளிப்பரப்பாகும் பனேகி அப்னி பாத்,ஜோதி, அதாலத் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார். மேலும் இந்தியில் ஹம் தும் அவுர் கோஸ்ட், யாரியன் 2, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஹே பிரபு, கிரிமினல் ஜஸ்டிஸ், அபய், நெவர் கிஸ் யுவர் பெஸ்ட் ஃபிரெண்ட் உள்ளிட்ட பல வெப்சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து தமிழில் ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் வில்லன் சுனில் தத்தாவாக நடித்திருந்தார். இப்பபடத்தில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, பவானி ரெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். ஒரு வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுத்திருந்த இப்படம் ஒரு அக்ஷன் த்ரில்லராக அதிக வசூலை குவித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. முக்கியமான வில்லனான ஜான் கொக்கனுடன் சேர்ந்து வங்கியில் உள்ள பணத்தை திருடும் முன்று வில்லன்களுள் ரித்துராஜ் சிங்கும் ஒருவர்.

தற்போது மாரடைப்பில் உயிரிக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. புனித் ராஜ்குமார், விவேக், சிரஞீவி சர்ஜா, மாரிமுத்து உள்ளிட்ட பலரையும் இழந்து வருவது திரையுலகை சோகத்தில் அழ்த்தியுள்ளது.
சமீபத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இறப்பிற்கு அஜித் நேரில் சென்று தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்தார். வெற்றி துரை சாமி அஜித்தின் நெருங்கிய நண்பர் ஆவார். இதை தொடர்ந்து அவருடன் நடித்திருந்த ரித்துராஜ் சிங்கும் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

59 வயதான ரித்துராஜ் சிங் கணைய அழர்ச்சி பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பல சீரியல்களில் நடித்து பாலிவுட்டில் பிரபலாமான ரித்துராஜ் சிங்கின் இழப்பு பாலிவுட் ரசிகர்கள் மற்றும் நடிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை தொடர்ந்து பல பிரபலங்களும் ரசிகர்களும் தனது ஆழ்ந்த இரங்கல்களை சமூக வளைத்தளத்தின் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...