அஜித்தின் அடுத்த அடுத்த படங்களை இயக்கப் போறது இந்த இரு இயக்குனர்கள் தானா? பரபரக்கும் கோலிவுட்..!

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். அஜர் பைஜான் எனும் இடத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விடாமுயற்சி படத்திற்கு பிறகு நடிகர் அஜித் எந்த இயக்குனர் படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி கோடம்பாக்கத்தில் வைரலாகி வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்:

நடிகர் அஜித்குமாரின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் அஜித் அடுத்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கப் போவதாகவும், அந்தப் படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க போவதாகவும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.

விடாமுயற்சி படத்திற்கு அதிகபட்சமாக நடிகர் அஜித் 105 கோடி சம்பளமாக வாங்கி வரும் நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேகமெடுக்கும் விடாமுயற்சி: 

விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்றும் இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் நடிகர் அஜித்துக்கு பிளாக்பஸ்டர் படம் லோடிங் என கூறப்பட்டு வரும் நிலையில், விடாமுயற்சி படத்தின் பிஸினஸுக்கு முன்பாகவே ஏகே 63 படத்திற்காக நடிகர் அஜித் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருப்பது சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா மற்றும் ரெஜினா கஸன்ட்ரா உள்ளிட்டோர் நடித்து வருவதாகவும் வில்லனாக சஞ்சய்தத் இணைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  விடாமுயற்சி படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு சம்மருக்கு அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில்:

இந்த ஆண்டு வெளியான துணிவு திரைப்படம் நடிகர் அஜித்துக்கு மிகப்பெரிய வசூல்வேட்டையை அள்ளித் தந்த நிலையில், அடுத்தடுத்து வேகம் காட்டி வருகிறார் அஜித்.

ஆதிக் ரவிச்சந்திரன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் அல்லது இரும்புத்திரை, சர்தார் படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...