என் பின்னாடி இருக்க கூட்டம் சினிமாவுக்கா? அரசியலுக்கா? அப்பவே அஜீத் கொடுத்த தக் ஃலைப் பதில்

அண்மையில் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளதாக வெளிவந்த அறிவிப்பினையடுத்து இன்றுவரை இணையம் முழுவதும், சோஷியல் மீடியாக்களிலும் விஜய் பற்றிய பேச்சுத் தான் வைரலாகி வருகிறது. ஒப்புக் கொண்ட படங்களை முடித்தபின் இனி அடுத்த படங்களில் நடிக்கப் போவதில்லை என்று விஜய் அறிவித்ததும் ஒருபுறம் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தாலும் மறுபுறம் இனி தளபதியை திரையில் காணமுடியாது என சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்க்கு திரையில் சம போட்டியாக அஜீத் இருந்து வரும் நிலையல் தற்போது அவர் வருடத்திற்கு ஒரு படம் மட்டும் நடித்து விட்டு தன்னுடைய குடும்பம், பைக்கிங் என அவர் பாதையைப் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார். இதனால் இனி இவர்கள் இருவரின் திரைப்பயணம் இனி என்னவாகும் என்று ரசிகர்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் அஜீத் அரசியலுக்கு வருவது பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயாடிவியில் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அஜீத்துடன் சந்தானம் இணைந்து நடித்த படம் பில்லா படத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ போல் உள்ளது. இதில் சந்தானம் அஜீத்திடம் உங்களுக்கென்று ஒரு கூட்டம் உள்ளது. அவர்களை உங்கள் சினிமா வளர்ச்சிக்கா இல்லை அரசியலுக்கு வரும் எண்ணத்தில் பயன்படுத்துவீர்களா என்று கேள்வி கேட்கிறார்.

12 வயதில் இளையராஜாவிடம் உதவியாளராகச் சேர்ந்த இசைப்புயல்.. இப்படித்தான் சேர்ந்தாரா?

அதற்கு அஜீத் நீண்ட நேரம் மௌனத்திற்குப் பிறகு, “,இந்தக் கேள்வி சிறந்ததாக இருக்கிறது. நாடு நல்லா இருக்கணும் என்பதற்காக எல்லாரும் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானது அல்ல. என்னைப் பொறுத்தவரை அவரவர் கடமைகளை ஒழுங்காகச் செய்தாலே நாடு நல்லா இருக்கும். நிறைய இடங்களில் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் குறைதான் சொல்லுகிறோம். மேலும் இன்று உலகம் முழுக்க உரிமைப் போராட்டங்கள் தானே அதிகம் இருக்கிறது. கடமையைப் பற்றி எத்தனை பேர் பேசுகிறோம். மக்களாகிய நாம் சரியாக இருக்கிறோமா? சில விஷயங்களைப் பேசினால் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். எல்லாரும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து கடமையை ஒழுங்காகச் செய்தாலே நோ பிராப்ளம்“ என அப்பேட்டியில் அஜீத் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தப் பேட்டி சோஷியல் மீடியாக்களில் வைரலாகப் பரவி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...