அஜித்தின் ‘துணிவு’: வேற லெவல் அப்டேட் கொடுத்த போனிகபூர்

அஜித் நடித்த ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதை அடுத்து இரண்டு படங்களின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ‘துணிவு’ படத்தின் சிங்கிள் பாடலான சில்லா சில்லா என்ற பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த பாடல் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.

ஜிப்ரான் இசையில் அனிருத் குரலில் உருவான சில்லா சில்லா என்ற பாடல் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கேட்ட உடன் அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரகனி, வீரா, ஜான் கொகைன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

வங்கியை கொள்ளை அடிக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்காக அஜித் நீண்ட காலமாக நீண்ட தாடி வைத்திருந்தார் என்பதும் படம் முழுவதும் அவர் இந்த தாடி கெட்டப்பில் வருகிறார் என்றும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க முழுக்க ஆக்ஷன் படமான இந்த படத்தில் அஜித்தின் கேரக்டர் வேற லெவல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.