அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு தாறுமாறான அப்டேட் இதோ!

அஜித் நடித்த துணிவு படமும் தளபதி விஜய் நடித்த வாரிசு படமும் இந்த வருட தொடக்கத்தில் வெளியாகி போட்டி போட்டு மோதிக் கொண்டது. அதை தொடர்ந்து தளபதி அவர்கள் தற்பொழுது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அஜித்தின் அடுத்தபடம் குறித்த அப்டேட் என்ன என்பது குறித்து உறுதியான தகவல் கிடைக்காத நிலையில் இருந்தது. முதலில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைவதாக தகவல் வெளியானது. அதை தொடர்ந்து அஜித் பிறந்த நாளான மே 1 அவரின் அடுத்த படத்தின் டைட்டில் வெளியானது.

தற்பொழுது அஜித் மகிழ் திருமேனியுடன் இணைந்து விடாமுயற்சி படம் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்தது. ஆனால் இன்று வரை இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க வில்லை. இதற்கு இடையில் அஜித் தனது வெளிநாடு சுற்று பயணத்தை முடித்துள்ளார். அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டிற்க்காக ரசிகர்கள் ஆவலும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு குறித்து மாஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 18ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என தகவல் கிடைத்துள்ளது.

ஒரே நாளில் வெளியாகும் 8 தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ!

மேலும் இயக்குனர் மகிழ்திருமேனி படக்குழுவுடன் இணைந்து தயாரிப்பாளரை சந்திக்க லண்டன் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் அங்கிருந்து திரும்பியதும் படப்பிடிப்பு தொடரும் என தகவல் வந்துள்ளது.

ஆனால் ஆகஸ்ட் 18ஆம் தேதியும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்க வில்லை என்றால் அஜித் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான ஆர்வம் குறைய வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகிறது, இதனால் ரசிகர்களை ஏமாற்றாமல் விடாமுயற்சி படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என உறுதியாக நம்பப்படுகிறது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...