அஜித்தின் ‘ஏகே 62’ படத்திற்கு முன்பே இன்னொரு படம்.. நீரவ் ஷா தீவிரம்..!

அஜித் நடிக்க இருக்கும் 62 வது திரைப்படம் ’ஏகே 62’  அறிவிப்பு தாமதமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் தற்போது அவர் பைக் டூர் சென்று விட்டார் என்பதும் அவர் மீண்டும் சென்னை எப்போது திரும்புவார் என்பது குறித்த தகவல் இல்லாமல் உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அஜித் நடிக்க இருக்கும் 62 ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு வரும் மே ஒன்றாம் தேதி அவருடைய பிறந்த நாளில் வெளியாகலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

லைகா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் அஜித் நாடு திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ajith bike1

இந்த நிலையில் அஜித் நடிக்க இருக்கும் 62 வது திரைப்படத்திற்கு முன்பே அஜித் பைக் டூர் குறித்த ஒரு டாக்குமெண்டரி திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அஜீத் உலக பைக் டூர் செல்லும் போது ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா அவர்களையும் உடன் அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவர் முக்கிய இடங்களில் சுற்றுப்பயணம் செய்யும் காட்சிகளை நீரவ் ஷா படமாக்கி வருவதாகவும் இவற்றை ஒன்று சேர்த்து அஜித்தின் உலக பைக் டூர் என்ற டாக்குமெண்ட்ரி திரைப்படம் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித்தின் உலக பைக் டூர் என்பது உலக சாதனைகளில் ஒன்றாக கருதப்படும் என்பதும் இந்திய திரை உலக வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனை என்பதால் இதனை டாக்குமென்டரி திரைப்படமாக எடுக்க அஜித் ஆசைப்படுவதாகவும் அதனால் தான் அவர் நீரவ் ஷாவை உடன் அழைத்துச் சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே அஜித் 62 திரைப்படத்திற்கு முன்பு அஜித் குறித்த டாக்குமெண்ட் திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த டாக்குமென்டரி திரைப்படத்தில் அவர் எந்தெந்த நாட்டிற்கு எப்போது சுற்றுப்பயணம் செய்தார்? பைக் பயணம் செய்யும்போது அவருடைய அனுபவம் எப்படி இருந்தது? அவரை சந்தித்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை பற்றி என்ன கூறினார்கள்? என்பது குறித்த தகவல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...