இதுவும் புண்ணியக் கணக்கில் சேருகிறதா? அப்படின்னா தொடர்ந்து செய்யலாமே… அகல் விளக்கு தீபம் ஏற்றக் காரணமே இதுதான்…!

திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேளை), அந்திப்பொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விசேஷ சக்தி உண்டு.

அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும். மிகக் கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும்.

deepam
deepam

இப்படி தூங்கா விளக்கினை சுத்தமான பசு நெய்யால் ஏற்றி மேல் சொன்னது போல இந்த மூன்று வேளைகளில் தொடர்ந்து தீபம் ஏற்றி வர நாம் எண்ணிய காரியத்தை நிறைவேற்றுமாம்.

இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரியப் போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப்போடும் அளவிற்கு சக்திவாய்ந்தது. மேலும்,விளக்கு ஏற்றாமல் பாழடைந்த பழைய திருத்தலங்கள் எத்தனையோ சிதிலமடைந்து கவனிப்பாரற்று இருக்கும் ஆலயங்களில் ஏற்றினால் மிகுந்த பலனை உடனடியாக கொடுக்கவல்லது.

ஆகவே, பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதைவிட ஒரு நெய்தீபம் பல மடங்கு சிறந்தது.

Nei dheepam
Nei dheepam

எந்தக் கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது. அகல், எண்ணெய், திரி, சுடர் இவையெல்லாம் சேர்ந்ததே விளக்கு. நெய் விளக்கு ஏற்றும் இடத்தில் மகாலஷ்மி குடியிருப்பாள்.

எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது. அதற்கு காரணமும் உண்டு. அதாவது அகல் விளக்கு ஒரு ஏழை ஒருவனால் ஐம்பூதங்களைக் ஜமண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்ஸ கொண்டு செய்யப்படுகிறது.

அவன் களிமண்ணில் நீரை ஊற்றி, சூரிய ஒளியில் காய வைத்து, காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு ஒரு அழகான அகல் விளக்கை செய்கிறான். அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதையே அம்பாள் விரும்புகிறாள்.

இன்னுமொரு காரணம், அகல் விளக்கை வாங்குவதால் அந்த ஏழைக் குடும்பமும் பிழைக்கிறது. நம்மை அறியாமல் ஒரு நல்ல செயல்களை செய்கிறோம். இதுவும் புண்ணியக் கணக்கில் போய் சேரும்.

மேலும் உங்களுக்காக...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.